/tamil-ie/media/media_files/uploads/2018/08/Pocophone.jpg)
Pocophone India
Pocophone என்ற பெயரினை வெகுகாலமாக கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் சியோமியின் வாடிக்கையாளர்கள். ஆனால் இந்த போக்கோஃபோன் என்றால் என்ன? எதற்காக இந்த பெயர் என்பது அனைவருக்கும் வெகுநாட்களாக தீராமல் இருந்த குழப்பம்.
Pocophone என்பது
போக்கோஃபோன் என்பது சியோமி திறன்பேசிகளின் புதிய பிராண்ட் பெயராகும். இந்தியாவில் இந்த போன்கள் வெளியாகுமா என்ற குழப்பம் வெகுநாட்களாக இருந்து வந்தது. இன்று இந்தியாவிற்கான சியோமி பிராந்திய தலைவர் ஜெய் மணி நம்முடைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இன்று தன்னுடைய ட்விட்டர் பகுதியில் இந்தியாவில் உருவாக இருக்கும் போக்கோஃபோன் பற்றிய பதிவு ஒன்றினை வெளியிட்டார்.
Today is a special day. I'm excited to start sharing more about the new project I've been working on. Wish me luck! @IndiaPOCO@GlobalPocophonepic.twitter.com/tZcAUjmgI5
— Jai Mani (@jaimani) 9 August 2018
போக்கோபோன் (Pocophone) சிறப்பம்சங்கள்
போக்கோபோன் (Pocophone) 6 அல்லது 8 ஜிபி RAMல் வரும். மேலும் அதன் இன்டர்நெல் ஸ்டோரேஜ் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகும். ப்ரோசஸ்ஸர் – குவால்கோம் நிறுவனத்தின் ஹையர் எண்ட் ப்ரோசஸ்ஸரான ஸ்நாப்ட்ராகன் 845 சிப்செட் இதில் இடம் பெறப் போகிறது.
திரை
5.99 அங்குல நீளம் கொண்ட இந்த போனின் ரெசலியூசன் 2160 x 1080 பிக்சல் ஆகும். 18:9 திரை பார்மட்டினை கொண்டிருக்கும்.
கேமரா
12MP + 5MP என பின்பக்க இரட்டைக் கேமராக்களுடன் வருகிறது இந்த போன். முன்பக்கக் கேமரா 20MP சென்சாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியினை ஆங்கிலேயத்தில் படிக்க
விலை
6GB RAM/64GB போக்கோபோனின் விலை 420 EUR (ரூபாய். 33,645 ) ஆகும். 8GB RAM/128GB போக்கோபோனின் விலை 460 EUR (ரூபாய் 36,849) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்ப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்த செய்தியை படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.