தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன.14-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும். இந்த முறையும் அதே போன்று கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகை தொடங்கி திருவள்ளுவர் தினம் வரை பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்பபடும்.
உழவு தொழிலில் அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து அதில் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கும் இந்த திருநாள் தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், கால்நடைகளான மாடு, ஆடுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாள் பொங்கல் பண்டிகையாகும்.
அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புங்கள். வழக்கமான வாழ்த்து செய்தியாக இல்லாமல் இந்த முறை சாட் ஜி.பி.டி வழங்கிய பொங்கல் வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.
“மகிழ்ச்சியும் செழுமையும் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கலின் இனிமை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும்! ”
“பொங்கல் வாழ்த்துக்கள்! இந்த அறுவடைப் பண்டிகை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஏராளமான மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரட்டும்.
“பொங்கல் பண்டிகை உங்கள் வாழ்வில் நல்ல காலம், செழிப்பு மற்றும் அமைதியை ஏற்படுத்தட்டும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்!”
“கரும்பு, பால் மற்றும் அரிசி கலந்த இனிப்பு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்!”
“அறுவடை மற்றும் புதிய தொடக்கங்களின் பண்டிகையான பொங்கல் உங்களுக்கு உற்சாகத்தை தரட்டும். வரவிருக்கும் ஒரு வளமான ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.