Advertisment

Pornhub Banned: 800 இணையதளங்கள் முடக்கம், மத்திய அரசு அதிரடி சரியா?

Porn Website banned in India : 827 ஆபாச இணைய தளங்களை முடக்கக் கோரி, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pornhub and porn website banned in India

Pornhub and porn website banned in India

Pornhub Banned: சமீபத்தில் இந்தியா முழுவதும் ஆபாச இணையத்தளங்களை முடக்கும்படி மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், சுமார் 800க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் முடக்கப்பட்டது.

Advertisment

உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 827 ஆபாச இணைய தளங்களை முடக்கக் கோரி, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்.

இந்த முடக்கத்தால் ஆபாச இணையத்தளங்களுக்கு வரும் தினசரி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், ஆதலால் இந்த முடக்கம் குறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சில இணையத்தளங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

Pornhub Banned : பார்ன்ஹப் நிறுவனம் பேட்டி

உலகம் முழுவதும் பிரபலமான பார்ன்ஹப் நிறுவனத்தின் துணை தலைவர் கோரி பிரைஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரைக்கைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “பார்ன் இணையத்தளங்களை முடக்கி மக்களுக்கு இந்த இணையங்களின் சேவைகள் தடுக்கப்படுவதால், ஆபத்துக்களே அதிகம் உள்ளது. இந்த நடவடிக்கையால் பலரும் சட்ட விரோதமான மற்றும் ஆபத்தான இணையங்களில் பார்க்க தொடங்குவார்கள்.” என்று கூறினார்.

மேலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “இந்த முடக்கத்தால் எவ்வளவு பாதிப்பு முழுமையாக ஏற்பட்டுள்ளது என்பதை இவ்வளவு குறைந்த நேரத்தில் கூற இயலாது. ஆனால் தினசரி வரும் பார்வையாளர்கள் அதிக அளவில் குறைந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பார்ன்ஹப் இணையத்தளத்திற்கு அதிக அளவிலான பார்வையாளர்களை ஈட்டித் தருவதில் இந்தியா தான் 3வது இடத்தில் உள்ளது. அலெக்ஸா ரேங்கிங் கணக்கில், இந்த இணையத்தளம் உலகிலேயே 29ம் இடத்தை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், “இந்தியாவில் பார்னோகிராபிக்கு எதிராகவோ பார்ன் பார்ப்பதற்கோ எவ்வித எதிரான சட்டமும் இல்லை. இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வராமல் எங்கள் போன்ற இணையத்தளத்தை முடக்குவதில் என்ன ஞாயம். இது போன்ற நடவடிக்கைகளுக்கு எங்கள் நிர்வாகம் எதிரானது. இது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இதனை சரி செய்ய இந்திய அரசுடன் இணைந்து பேச தயாராக உள்ளோம். ” என்று கோரி பிரைஸ் காட்டம் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர் இந்த தடையினால், இந்தியாவில் பார்ன் இணையத்தளங்களை தேடுபவர்கள் தவறான ஆபத்தான இணையத்தளங்களுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இத்தனைக்கும் எங்கள் இணையத்தளம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வீடியோக்கள் பார்க்க முடியும் போன்ற விதிமுறைகளும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Social Websites
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment