போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் அடுத்த வருடம் வெளியீடு

Porsche's first fully electric car : இந்த கார் செப்டம்பர் 4ம் தேதி ஒரே நேரத்தில் 3 நாடுகளில் அறிமுகமாகிறது

Porsche's first fully electric car : இந்த கார் செப்டம்பர் 4ம் தேதி ஒரே நேரத்தில் 3 நாடுகளில் அறிமுகமாகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Porsche Taycan, Porsche's first fully electric car

SBI Car Loan Customer Care, SBI Online, SBI NetBanking, online sbi, State Bank Of India, எஸ்பிஐ, எஸ்பிஐ கார் கடன்

Porsche Taycan : பெட்ரோல் டீசல் எரிபொருள்களின் பாற்றாக்குறை, பெட்ரோல் டீசல் எரிபொருள்களின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை கவனித்தில் கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரும் நிறுவனங்கள் செய்து வருகின்றன.

Porsche Taycan அறிமுக விழா

Advertisment

புகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் அடுத்த வருடத்தில் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் காரினை வெளியிட உள்ளது. டெஸ்லா, லோட்டஸ் போன்ற ஜாம்பவான்கள் சாம்ராஜ்ஜியத்திற்கு சவால் விடும் வகையில் போர்ஷே நிறுவனம் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் காரான டய்கனை (Taycan) வெளியிட உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகவிழா செப்டம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் ஜெர்மனி, சீனா, மற்றும் கனடா என்று மூன்று நாடுகளில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. இந்த அறிமுக விழாவினை நீங்கள் இந்நிறுவனத்தின் யூ.டியூப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த வருடத்தின் இறுதிக்குள் 20 ஆயிரம் கார்களை மட்டுமே தயாரித்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். அடுத்த வருட இறுதிக்குள் இந்த கார் இந்தியாவிலும் அறிமுகமாகிவிடும் என்பதால் கவலை வேண்டாம்.

இந்த காரினை உருவாக்கும் திட்டத்தை 2015ம் ஆண்டிலேயே துவங்கியது போர்ஷே நிறுவனம்.

Advertisment
Advertisements

ஈ-மிஷன் கான்செப்ட் மூலம் இன்ஸ்பைர் ஆகி இப்படியான ஒரு காரை உருவாக்கியுள்ளது போர்ஷே.

3.5 நொடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறனுடன் உள்ளது. இந்த காரின் அதிக பட்ச வேகம் 500 கி.மீ ஆகும்.

இந்த கார் குறித்த இதர தகவல்களுக்கு இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்கள். எஞ்சின், விலை, விற்பனையின் ஆரம்ப நாள் குறித்து விரைவில் உங்களுக்கு நாங்கள் அப்டேட் செய்கின்றோம்.

மேலும் படிக்க : எலெக்ட்ரிக் காரின் பீஸ்ட் இது தான்… 2000PS பவரில் இயங்கும் ஹைப்பர்கார் ஒரு பார்வை

Automobile

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: