/indian-express-tamil/media/media_files/2025/09/02/vivo-t4-lite-5g-2025-09-02-13-50-59.jpg)
ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்... 6,000mAh பேட்டரியுடன் களமிறங்கும் விவோ!
ரூ.10,000 பட்ஜெட்டில், 5ஜி போனைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? பெரிய பேட்டரி மற்றும் சிறந்த கேமரா வசதிகளும் எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால், விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். தற்போது பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.9,999-க்கு கிடைக்கிறது. ராணுவத் தர சான்றளிக்கப்பட்ட (military-grade certified) உறுதியுடன் இந்த போன் வருவது இதன் தனிச்சிறப்பு. மேலும், இதில் டூயல் பின்பக்க கேமராக்களும், பெரிய 6000 mAh பேட்டரியும் உள்ளன.
இந்த போனை முதலில் ரூ.13,999-க்கு விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது, ஆனால் இப்போது நீங்கள் அதை வெறும் ரூ.9,999-க்கு வாங்கலாம். சிறப்பு வங்கி தள்ளுபடிகளையும் நிறுவனம் வழங்குகிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது, ரூ.4,000 வரை சேமிக்க முடியும். Flipkart SBI கிரெடிட் கார்டு மூலமும் இதேபோன்ற சலுகைகள் கிடைக்கின்றன. மாதத்திற்கு ரூ.629 செலுத்தி, டெபிட் கார்டு இ.எம்.ஐ. திட்டத்திலும் இந்த போனை வாங்கலாம்.
உங்கள் பழைய போனை கொடுத்து, ரூ.8,900 வரை தள்ளுபடி பெறக்கூடிய சிறப்பு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன்மூலம், உங்கள் பழைய போனுக்கு நல்ல மதிப்பை பெறலாம். ₹149 மட்டும் செலுத்தி, கூடுதலாக ஒரு வருட வாரண்டியையும் பெறலாம். விவோ டி4 லைட் 5ஜி போனில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது 4 GB ரேம்+ 128 GB சேமிப்பு வசதியுடன் வருகிறது. இதன் சேமிப்பை 2 TB வரை விரிவுபடுத்தலாம்.
கேமராவைப் பொறுத்தவரை, இதில் 50 MP முதன்மை கேமரா மற்றும் 2 MP துணை கேமரா கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு 5 MP முன்பக்க கேமரா உள்ளது. இந்த போன் பெரிய 6000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் டைமென்சிட்டி 6300 5ஜி (Dimensity 6300 5G) பிராசஸரால் இயக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.