உலகின் மிகப்பெரிய மற்றும் முன்னிணி தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. இதன் சி.இ.ஓ-வாக சுந்தர் பிச்சை உள்ளார். இவர் இந்தியர் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர். அதே போல் பல இந்தியர்கள் உலகின் முன்னிணி நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் உள்ளனர்.
அந்த வகையில் தற்போது மற்றொரு இந்தியர் பிரபாகர் ராகவன் கூகுளின் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் பயின்ற இவர் கூகுளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
64 வயதான பிரபாகர் ராகவன் கூகுளின் முக்கிய பொறுப்பை பெற்றுள்ளார். இவர் போபாலில் பள்ளிப்படிப்பை படித்தார். தொடர்ந்து சென்னை ஐஐடியில் இளநிலை இ.இ.இ படிப்பை முடித்தார். தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஹச்.டி பட்டம் பெற்றார்.
முதலில் ஐ.பி.எம் நிறுவனத்தில் பணிபுரிந்த பிரபாகர் 2012-ல் கூகுளில் சேர்ந்தார். இப்போது கூகுளின் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் தற்போது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரபாகர் ராகவன் புதிய முயற்சிகளை முன்னெடுப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
சாட் ஜி.பி.டி, மைக்ரோசாப்ட் கோபைலட் ஆகிய ஏ.ஐகள் தீவிரமாக செயல்படும் நிலையில் கூகுள் ஜெமினிக்கு புதிய சேவை வழங்குவார் என பிரபாகர் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கூகுள் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராக பணியாற்றிய போது ராகவன் ஆண்டு சம்பளமாக ரூ.300 கோடி பெற்று வந்த நிலையில், இப்போது பதவி உயர்வுக்கு பின் எவ்வளவு சம்பளம் பெறுவார் எனத் தெரியவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“