/indian-express-tamil/media/media_files/2025/09/07/legion-pro-34wd-10-oled-monitor-2025-09-07-14-09-20.jpg)
240HZ ரெஃப்ரெஷ் ரேட், 0.03ms ரெஸ்பான்ஸ் டைம்... லெனோவா லெஜியன் ப்ரோ OLED மானிட்டர்!
லெனோவா நிறுவனம் இந்தியாவில் கேமிங் & கிரியேட்டர்ஸ்களுக்காக புதிய லெஜியன் ப்ரோ 34WD-10 OLED மானிட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மானிட்டர், 34-இன்ச் அல்ட்ரா-வைட் வளைந்த OLED டிஸ்ப்ளேவை UWQHD (3440x1440) ரெசல்யூஷனுடன் கொண்டுள்ளது. அதிவேக ஈ-ஸ்போர்ட்ஸ் & அதிக பிரேம் ரேட் கேம்களுக்கு ஏற்ற வகையில், இந்த மானிட்டர் மிக விரைவான எதிர்வினை நேரத்தையும் (response time) எந்தவித இயக்க மங்கலும் (motion blur) இல்லாமல் வழங்குகிறது என்று லெனோவா தெரிவித்துள்ளது.
லெஜியன் ப்ரோ 34WD-10 OLED: சிறப்பம்சங்கள்
34-இன்ச் அல்ட்ரா-வைட் வளைந்த OLED டிஸ்ப்ளே, UWQHD (3440x1440) ரெசல்யூஷன், 800R வளைவு & 240Hz ரெஃப்ரெஷ் ரேட். 0.03ms எதிர்வினை நேரத்துடன், அதிக FPS கொண்ட கேம்களிலும் மங்கல் இல்லாத தெளிவான காட்சிகளை வழங்குகிறது.
AMD FreeSync Premium Pro, இந்தத் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் கார்டுடன் ரெஃப்ரெஷ் ரேட்டை ஒத்திசைத்து, திரை பிளவுபடுவதைத் (tear-free) தடுக்கிறது. 10-பிட் கலர் டெப்த் மற்றும் தொழில்முறை தரத்திலான கலர் துல்லியம், ஆழமான கருமை மற்றும் துடிப்பான வண்ணங்களுடன் உண்மையான காட்சிகளை வழங்குகிறது. இரு 5W ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ஆம்பிள் தொழில்நுட்பத்துடன் வழங்கப்படுகின்றன.
லெனோவாவின் நேச்சுரல் லோ ப்ளூ லைட் தொழில்நுட்பம் மற்றும் TÜV Rheinland Eyesafe 2.0 சான்றிதழ் ஆகியவை கண் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. AI-வழியாக இயங்கும் ஸ்மார்ட் இமேஜ் கேம் மோட், விளையாடப்படும் கேமிற்கு ஏற்ப டிஸ்ப்ளே அமைப்புகளை தானாகவே சரிசெய்கிறது.
இணைப்பு வசதிகள்: USB-C (140W பவர் டெலிவரி), HDMI 2.1, DisplayPort 1.4, பல USB 3.2 போர்ட்கள் மற்றும் RJ45 ஈதர்நெட் போர்ட் ஆகியவை இதில் அடங்கும். மேலும், 2 சாதனங்களுக்கு இடையில் எளிதாக மாற உதவும் KVM சுவிட்சும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த KVM சுவிட்ச், சாய்த்து, சுழற்ற மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய எர்கோனோமிக் ஸ்டாண்ட் உள்ளது.
லெனோவா அதிகாரப்பூர்வ இணையதளம், லெனோவா பிரத்யேக கடைகள், மற்றும் இந்தியாவின் சில முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் இப்போது வாங்கக் கிடைக்கும். விலை: ரூ.1,09,990.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.