Price drop mobiles in india 2021; Poco, Oneplus, Samsung New price Tamil News : புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வருவதால், பழைய ஸ்மார்ட்போன்களின் விலை படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. இந்த சாதனங்கள் சிலநேரங்களில் அவற்றின் பிரிவு அல்லது தொடர்களில் சமீபத்தியதாக இருக்காது என்றாலும், புதிய விலைகள் சிறந்த மதிப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் விலையில் குறைந்துவிட்ட பின்வரும் ஸ்மார்ட்போன்களை 2021-ம் ஆண்டில் குறைந்த விலையில் வாங்கலாம்.
ஒன்ப்ளஸ்
ஒன்ப்ளஸ் 8 முதலில் இந்தியாவில் ரூ.41,999 விலை முதல் ஆரம்பமானது. இப்போது ஒன்ப்ளஸ் 8-ன் விலை அமேசான் இந்தியாவில் ரூ.39,990-ஆக குறைந்துள்ளது. எச்டிஎப்சி கார்டுடன் இந்த தொலைபேசியை வாங்கினால் இறுதி விலையிலிருந்து ரூ.2,000 கிடைக்கும். ஒன்ப்ளஸ் 8-ல் 6.55 இன்ச் FHD + ஸ்க்ரீன், ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 48 MP பிரதான கேமரா மற்றும் 4,300 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை உள்ளன.
இதற்கிடையில், ஒன்ப்ளஸ் 7T ப்ரோ முதலில் இந்தியாவில் ரூ.53,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த தொலைபேசி இப்போது ரூ.43,999 விலைக்கு விற்பனையாகிறது. ஒன்ப்ளஸ் 7T ப்ரோ, 6.67 இன்ச் QHD + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட், 48MP பிரதான கேமரா, பாப்-அப் செல்பி கேமரா மற்றும் 4,085 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
IQOO
முதலில் ரூ.38,999-ல் தொடங்கப்பட்ட iQOO 3 பின்னர் இந்தியாவில் தள்ளுபடி செய்து அதன் விலையை நிரந்தரமாக ரூ.34,990-ஆக குறைத்தது. இப்போது இந்த தொலைபேசியின் விலை இன்னும் குறைவாகவே உள்ளது. 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபேஸ் வேரியன்ட்டை ஃப்ளிப்கார்ட்டில் ரூ.29,990 விலைக்கு வாங்கலாம். AN 8GB/256GB 5G வேரியன்ட்டும் ரூ.32,990-க்கும், அதிகபட்சமாக 12 ஜிபி / 256 ஜிபி வேரியன்ட் ரூ.39,990-க்கும் கிடைக்கின்றன. IQOO 3-ல், 6.44 இன்ச் FHD + ஸ்க்ரீன், ஒரு ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 48MP பிரதான கேமரா சென்சார் மற்றும் 4,400mAh பேட்டரி ஆகியவை உள்ளன.
சாம்சங்
சாம்சங் கேலக்ஸி A31 முதலில் ரூ.21,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த தொலைபேசி இப்போது ரூ.17,999 விலையில் கிடைக்கிறது. 6.4 இன்ச் FHD + ஸ்க்ரீன், மீடியாடெக் எம்டி 6768 ஹீலியோ பி 65 சிப்செட், 48 MP பிரதான கேமரா மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட விவரக்குறிப்புகளுடன் இந்த தொலைபேசி வருகிறது. சாம்சங் கேலக்ஸி M01 மற்றும் கேலக்ஸி M01s பட்ஜெட் தொலைபேசிகளும் சமீபத்தில் விலைக் குறைப்புகளைப் பெற்றன.
கேலக்ஸி எம் 01 ரூ.8,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ரூ.7,499-க்கு கிடைக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட், 5.7 இன்ச் ஸ்க்ரீன், 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இதற்கிடையில், முதலில் ரூ.9,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி M01s இப்போது ரூ.8,999-க்கு கிடைக்கிறது. மேலும், 6.2 இன்ச் ஸ்க்ரீன், மீடியாடெக் ஹீலியோ பி 22 சிப்செட், 13 எம்பி கேமரா மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
போகோ
போகோ சமீபத்தில் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களான போகோ சி3 மற்றும் போகோ எம்2 விலையை குறைத்துள்ளது. முதலில் 64 ஜிபி வேரியன்ட்டிற்கு ரூ.10,999 விலையை வைத்திருந்த போகோ எம்2 இப்போது ரூ.9,999-ஆக குறைந்திருக்கிறது. சாதனத்தின் 128 ஜிபி வேரியன்ட்டும் இப்போது ரூ.10,999-க்கு கிடைக்கிறது. போக்கோ எம்2, 6.53 இன்ச் FHD + ஸ்க்ரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட், 13 MP பிரதான கேமரா மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
போகோ சி3, 4 ஜிபி வேரியன்ட் இப்போது அதன் அசல் விலை ரூ.8,999-லிருந்து ரூ.8,499-க்கு கிடைக்கிறது. இதன் 3 ஜிபி வேரியன்ட் இன்னும் ரூ.7,499-க்கு கிடைக்கிறது. போக்கோ சி3-ன் விவரக்குறிப்புகள் பொறுத்தவரை, 6.43 இன்ச் ஸ்க்ரீன், மீடியா டெக் ஹீலியோ ஜி 35 சிப்செட், 13MP பிரதான கேமரா மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை அடங்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"