ஆதார் கார்டை 'லாக்' செய்வது எப்படி? ஒரு நிமிடத்தில் பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யலாம்! சிம்பிள் டிப்ஸ்

ஆதார் அட்டைத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, உங்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் பூட்டி வைக்கும் வசதியை UIDAI வழங்குகிறது. இதன் மூலம், கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற உங்கள் தகவல்கள், அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம்.

ஆதார் அட்டைத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, உங்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் பூட்டி வைக்கும் வசதியை UIDAI வழங்குகிறது. இதன் மூலம், கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற உங்கள் தகவல்கள், அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Aadhaar card lock

ஆதார் கார்டை 'லாக்' செய்வது எப்படி? ஒரு நிமிடத்தில் பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யலாம்! சிம்பிள் டிப்ஸ்

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை அனைத்து சேவைகளுக்கும் அவசியமான ஆவணமாக மாறியுள்ளது. அரசு, தனியார் சேவைகள், ஹோட்டல் முன்பதிவுகள் எனப் பல இடங்களில் ஆதார் கட்டாயமாகிறது. அதே சமயம், ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பொதுமக்கள் ஏமாற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது.

Advertisment

இத்தகைய மோசடிகளைத் தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முக்கிய வசதியை வழங்குகிறது. ஆதார் அட்டையில் உள்ள கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் பூட்டி வைப்பதன் (Lock) மூலம், உங்கள் அனுமதியின்றி யாரும் அடையாள சரிபார்ப்பு அல்லது நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. இதனால், மோசடி நடக்கும் வாய்ப்பு பெரிதும் குறைகிறது. ஆதார் அட்டையைப் பூட்டுவதற்கான வழிகள் பற்றி பார்க்கலாம்.

1. UIDAI இணையதளம் மூலம் லாக் செய்தல்:

முதலில், UIDAI-இன் myAadhaar இணையதளத்திற்குச் சென்று உள்நுழையவும்.

'Lock/Unlock Aadhaar' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இப்போது, முதலில் ஒரு மெய்நிகர் ஐடியை (VID) உருவாக்க வேண்டும். அதைச் செய்ய, 'Click Here to Generate VID' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

VID உருவாக்கப்பட்டதும், அதே பக்கத்திற்குச் சென்று, 'Lock Aadhaar' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தேவையான தகவல்களை உள்ளிட்டு, 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

Advertisment
Advertisements

உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டுச் சரிபார்த்தால், உங்கள் பயோமெட்ரிக் விவரங்கள் லாக் செய்யப்படும்.

2. mAadhaar செயலி மூலம் லாக் செய்தல்:

Google Play Store அல்லது Apple App Store-லிருந்து mAadhaar செயலியைப் பதிவிறக்கம் செய்து, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழையவும்.

'My Aadhaar' பகுதிக்குச் சென்று, உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

OTP-ஐ சரிபார்த்த பிறகு, 'Biometric Lock' என்ற விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்படும்.

3. எஸ்.எம்.எஸ். வழியாக லாக் செய்தல்:

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1947 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

குறுஞ்செய்தியில், GETOTP என்று டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு, உங்கள் ஆதாரின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிடவும்.

உங்கள் மொபைல் எண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், கடைசி 8 இலக்கங்களைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டுச் சரிபார்த்தால், உங்கள் பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்படும்.

ஆதார் கட்டாயம் இல்லாத இடங்களில் ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அட்டை போன்ற வேறு ஆவணங்களைப் பயன்படுத்தலாம். ஆதார் தேவைப்படும்போது, மாஸ்க்டு ஆதார் (masked Aadhaar) அட்டையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

Aadhaar Card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: