இந்த கோடையில் அதிகப்படியான வெப்பம் காரணமாக உங்கள் போன் ஓவர்ஹீட் ஆக வாய்ப்புள்ளது. இதை பலரும் எதிர்கொண்டிருப்போம். கவலை வேண்டாம். இதை சமாளிப்பதற்கான சில டிப்ஸ் இங்கே பார்ப்போம்.
Safe Temperature Range
வீட்டிற்கு வெளியில் அல்லது உள்ளே என எப்போது உங்கள் போனை பயன்படுத்தினாலும் பாதுகாப்பான வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான முக்கிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, ஃபோன்கள் பொதுவாக 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலையில் பயன்படுத்த பாதுகாப்பானவை. அதே நேரம், வெப்பநிலை வரம்பு 32 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் போது ஐபோன்கள் மற்றும் ஐபாட்களைப் பயன்படுத்த ஆப்பிள் பரிந்துரைக்கிறது. எனினும் உங்கள் ஸ்மார்ட்போனின் safe temperature range-ஐ அறிந்து பயன்படுத்தவும்.
Temperature Warnings
இது போன்ற எச்சரிக்கையை பலரும் பார்த்திருப்போம். ஆம் உங்கள் போன் குறிப்பிட்ட வெப்ப நிலையை தாண்டும் பொழுது போன் தானாகவே உங்களுக்கு எச்சரிக்கை பதிவு காண்பிக்கும். சாம்சங். ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் இதை வழங்குகின்றன. சாம்சங் போனில் இந்த எச்சரிக்கை பதிவு வரும் போது உங்கள் போனை பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ வேண்டாம். தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த, சீரான
வெப்பநிலை வந்த பின் பயன்படுத்தலாம். அதே நேரம் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Phone's Settings மாற்றம்
சில நேரம் அதிகப்படியான செயலிகளை ஒரே நேரம் பயன்படுத்தும் போது உங்கள் போன் ஓவர்ஹீட் ஆகலாம். இதை சரி செய்ய முடியும். உங்கள் போனை குளிர்ந்த நிலைக்கு கொண்டு வர airplane mode எனெபிள் செய்யலாம். brightness லெவல் குறைப்பது போன்றவை உங்கள் போன் குறைந்த பேட்டரியை பயன்படுத்த உதவும். மேலும், Battery Saver ஆன் செய்வது அல்லது Low Power Mode ஆன் செய்வது போன்றவையும் உங்கள் பேட்டரி பயன்பாடை குறைத்து போன் ஓவர்ஹீட் ஆவதை தடுக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“