ஆதார் அட்டை மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை தொடங்கி ஷாப்பிங் வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. நம்மிடம் உள்ள பிற அடையாள அட்டைகள் பான் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றுடனும் இணைக்கப்படுகிறது. அதாவது ஆதார் அட்டை ஒன்று இருந்தால் போதும் அனைத்தையும் அதில் தெரிந்து கொள்ள முடியும். இவ்வளவு முக்கிய அடையாள அட்டையை கவனமுடனும், மோசடி கும்பலிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியமாகிறது.
அந்த வகையில் ஆதார் கார்டு லாக் செய்து வைக்கப்படும் போது உங்கள் பயோமெட்ரிக் தரவு மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. இது ஒரு கூடுதல் பாதுகாப்பாக அமைகிறது. தேவைப்பட்டால் லாக் (Lock) செய்யலாம் அதே நேரம் எளிதாக அன்லாக் (Unlock) செய்யும் கொள்ளலாம்.
ஆதார் கார்டு லாக் செய்து எப்படி?
UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://uidai.gov.in/ செல்லவும்.
"My Aadhaar" என்ற பக்கத்திற்கு செல்லவும்.
"Aadhaar Services" செலக்ட் செய்யவும்.
அடுத்து "Aadhaar Lock/Unlock" ஆப்ஷனைக் கொடுக்கவும்.
"Lock UID" என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
இப்போது உங்கள் ஆதார் அட்டை எண், பெயர் மற்றும் பின் கோடு உள்ளிடவும்.
"Send OTP" பட்டனை கொடுக்கவும்.
இப்போது ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபட்டிருக்கும். அதை உள்ளிடவும்.
அவ்வளவு தான் ஓ.டி.பி கொடுத்த பின் உங்கள் ஆதார் எண் லாக் செய்யப்படும். உங்களின் முக்கியமான தரவுகளுக்கு கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கும்.
எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் லாக் செய்வது?
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து "GETOTP என டைப் செய்து (உங்கள் ஆதாரின் கடைசி 4 எண்களை)" குறிப்பிட்டு 1947 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஆதார் எண் 223344556677 எனில், "GETOTP 6677" என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். இப்போது உங்கள் ஆதார் லாக் செய்யப்பட்டது என்ற தகவல் UIDAI மூலம் அனுப்படும்.
ஆதார் அன்லாக் செய்வது எப்படி?
முன் கூறியது போல் UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://uidai.gov.in/ செல்லவும்.
My Aadhaar Aadhaar Services செக்ஷன் செல்லவும்.
"Aadhaar Lock/Unlock" ஆப்ஷன் கிளிக் செய்யவும்.
இப்போது "Unlock UID" ஆப்ஷனை கொடுக்கவும்.
அடுத்து 16 இலக்க virtual ID-ஐ என்டர் செய்யவும்.
இப்போது "Send OTP" பட்டனை கொடுக்கவும்.
ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபட்டிருக்கும். அதை பதிவிடவும். இறுதியாக Submit கொடுத்தால். உங்கள் ஆதார் எண் அன்லாக் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.