பிராக்ஸிமா சி: புதிய ‘சூப்பர் எர்த்’ கண்டுபிடிப்பு; ஆனால், அதில் உயிரினங்கள் வாழ முடியுமா?

சூரியனின் மிக அருகிலுள்ள நட்சத்திரமான பிராக்ஸிமா செண்டாரியைச் சுற்றி வரும் ஒரு புதிய ‘சூப்பர்-எர்த்’ கிரகம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை அறிவியல் முன்னேற்றங்கள் என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.

By: Updated: January 18, 2020, 11:18:43 AM

சூரியனின் மிக அருகிலுள்ள நட்சத்திரமான பிராக்ஸிமா செண்டாரியைச் சுற்றி வரும் ஒரு புதிய ‘சூப்பர்-எர்த்’ கிரகம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை அறிவியல் முன்னேற்றங்கள் என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர். பிராக்ஸிமா சி என்பது உயிரினங்கள் வாழ சாத்தியமான இரண்டாவது கிரகமாகும். இருப்பினும் உறை பனி கோட்டிற்கு அப்பால் அல்லது அதன் எல்லைகள் தண்ணீர் உறைந்த நிலையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…

2016 ஆம் ஆண்டில், பிராக்ஸிமா பி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிரகம் மிகப் பெரியது. இது பிராக்ஸிமா செண்டாரி நட்சத்திரத்துடன் நெருக்கமாக உள்ளது. புதிய பிராக்ஸிமா சி கிரகம் பிராக்ஸிமா பி-யைவிட மிகச் சிறியது என்று நம்பப்பட்டாலும் ஒரு ‘சூப்பர் எர்த்’ என்பதற்றான முதன்மைப் போட்டியாளராகப் பார்க்கப்படுகிறது.

புதிய கிரகம் பிராக்ஸிமா செண்டாரி நட்சத்திரத்தை ஒரு முறை சுற்றி முடிக்க 5.2 பூமி ஆண்டுகள் ஆகும். மேலும், அதனுடைய சூரியனிலிருந்து மேலும் தொலைவில் உள்ளது. எனவே அது உறைந்து இருக்கும்.

இது குறைந்தபட்ச நிறையைக் கொண்டிருக்கிறது. இதன் நிறை நெப்டியூனில் பாதி ஆகும். இது இன்னும் இதை‘சூப்பர் எர்த்’ பிரிவில் வைக்கிறது. இருப்பினும் இது குறைந்த நிறையைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த கிரகத்தின் வெப்பநிலை மைனஸ் 234 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆய்வு கட்டுரையில், விஞ்ஞானிகள் பிராக்ஸிமா சி கண்டுபிடிப்பு “கிரக உருவாக்கம் மாதிரிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறியுள்ளனர். இதற்குக் காரணம், கிரகம் நட்சத்திரத்தைச் சுற்றுவதற்கான மிக நீண்ட காலங்களில் ஒன்றாகும். சூப்பர்-எர்த் பரப்பில் உள்ள குறைந்தபட்ச நிறை, தற்போதுள்ள ரேடியல் வேகம் (ஆர்.வி) நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆர்.வி தோழில் நுட்பம் குறைந்த நிறை அல்லது எம்-வகை நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள புதிய கிரகங்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. எம்-வகை நட்சத்திரங்கள் குறைந்த நிறையைக் கொண்டிருப்பதால், இந்த நட்சத்திரங்கள் அவற்றைச் சுற்றிவரும் இந்த கிரகங்களிலிருந்து வரும் ஈர்ப்பு விசைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நட்சத்திரங்கள் எவ்வாறு ‘தள்ளாடுகின்றன’ என்பதைப் பார்த்து புதிய உலகங்கள் கண்காணிக்கின்றன. பிராக்ஸிமா செண்டாரி ஒரு சிறிய குறைந்த நிறை நட்சத்திரமாகும். இது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது நமது சூரியனுக்கு மிக நெருக்கமான நட்சத்திரம் என்று நம்பப்படுகிறது.

சூப்பர் எர்த்கள் பெரிய பாறை கிரகங்கள் ஆகும். அதனைச் சுற்றி மிகப் பெரிய அளவில் வாயுமண்டலங்கள் இல்லை. நாசாவின் கூற்றுப்படி, இந்த சூப்பர் எர்த் கிரகங்கள், அவை பாறை மேற்பரப்புடன் பூமியை விட 10 மடங்கு பெரியவை. ஆனால், இந்த கிரகங்கள் அவற்றின் பாறை மேற்பரப்பை எப்போது இழக்கும் என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இந்த கிரகங்கள் எதிர்காலத்தில் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்க முடியுமா என்பதும் தெளிவாக இல்லை.

முந்தைய, நாசா ஆராய்ச்சி ஒன்றில், பிராக்ஸிமா பி வேற்றுக்கிரக வாசிகள் வாழ வாய்ப்பில்லை. இருப்பினும், இது வாழக்கூடிய மண்டலத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அங்கு திரவ நீர் அதன் நிலையான வடிவத்தில் இருக்கும்.

பிராக்ஸிமா பி-யும் பிராக்ஸிமா செண்டாரி நட்சத்திரத்தைதான் சுற்றி வருகிறது. நாசாவின் கூற்றுப்படி, அதன் நிறை 1.27 பூமி என்று நம்பப்படுகிறது. மேலும் அதன் நட்சத்திரத்தின் ஒரு சுற்றுப்பாதையை முடிக்க 11.2 நாட்கள் ஆகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Proxima c a new super earth discovered but will it be viable for life

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X