இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் உருவாக்கப்பட்ட 2 தனித்துவமான கருவிகளை சுமந்து டிசம்பர் 4ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
உலகில் முதல்முறையாக parallel satellite pair ஏவப்பட உள்ளது. சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கான சூரிய கரோனாவை ஆய்வு செய்ய
2 செயற்கைக் கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலகில் முதன்முதலாக, ப்ரோபா-3 மிஷனில் இரண்டு செயற்கைக் கோள்களை ஒன்றுக் கொன்று இணையாக நீண்ட காலத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் கருவிகள் - இந்தியாவின் ஆதித்யா எல்1 மிஷனில் உள்ளது போன்று ஆகும். சூரியனைப் பார்க்க ஒரு கரோனாகிராஃப் மற்றும் சூரியனின் பிரகாசமான ஒளியைத் தடுக்க ஒரு மறைபொருளைக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஒரே செயற்கைக்கோளில் இரண்டு கருவிகளை கொண்டிருப்பதற்குப் பதிலாக, இதில் ஒரு செயற்கைக்கோளில் கரோனாகிராஃப்-ம் மற்றொன்றில் occulter-ம் உள்ளது.
செயற்கைக்கோள்கள் parallel வடிவில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பயணிக்கும். சுமார் 150 மீ தொலைவில் இணையான அமைப்பில் பறக்கும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 600 x 60530 கி.மீ உயரமான நீள்வட்ட சுற்றுப் பாதையில் ஒன்றாக அடுக்கப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தப்படும்.
பின்னர், செயற்கைக் கோள்கள் இணையான ( parallel) சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“