scorecardresearch

அச்சு அசல் ஆப்பிள் வாட்ச்.. ஆனால் விலை இவ்வளவு தான்.. விவரம் என்ன?

உள்நாட்டு தயாரிப்பான pTron நிறுவனம் புதிய வகை பட்ஜெட் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஆப்பிளின் பிரீமியம் வாட்ச்சான அல்ட்ராவைப் போன்று இருக்கும்.

அச்சு அசல் ஆப்பிள் வாட்ச்.. ஆனால் விலை இவ்வளவு தான்.. விவரம் என்ன?

ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் வாங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். காரணம் தனித்துவமான டிசைன், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் இருக்கும். ஆனால் அதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும். பிரீமியம் வகை பொருட்களாக இருக்கும். இந்நிலையில் பட்ஜெட் விலையில் ஆப்பின் வாட்ச் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு
pTron ஸ்மார்ட்வாட்சை தேர்ந்தெடுக்கலாம். pTron-னின் புதிய Force X12N மாடல் வாட்ச் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா-வை போன்ற தோற்றம் இருக்கும். தோற்றத்தில் அச்சு அசல் இந்த ஆப்பிள் வாட்ச் போல் இருக்கும் . ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் விலை ரூ. 89,900 ஆகும். அதே சமயம் pTron வாட்ச் ரூ. 1200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

pTron Force X12N

pTron Force X12N ஆனது ரூ.1499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அறிமுக விலையாக ரூ.1199-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ப்ளூடூத் காலிங் வசதி, 1.85-இன்ச் முழு-டச் டிஸ்ப்ளே, ஃபிட்னஸ் டிராக்கர் அம்சங்கள் வழங்குகிறது. ஸ்மார்ட்வாட்ச் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது மற்றும் நான்கு நிறங்களில் கிடைக்கிறது- Blazing Blue, Gold Black, Carbon Black , மற்றும் ஷாம்பெயின் பிங்க் நிறத்தில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் pTron Force X12N ஸ்மார்ட்வாட்சை வாங்கலாம்.

5 நாட்கள் வரை பேட்டரி சார்ஜ் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்வாட்ச்சில் 5 built-in கேம்ஸ், ஸ்மார்ட் ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர்கள், இதய துடிப்பு சோதனை, SpO2 ரத்த ஆக்ஸிஜன், ரத்த அழுத்த சோதனை, calories burnt & 8 sports modes ஆப்ஷன் வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Ptron ultra look a like apple watch comes with a price under rs 1500