PUBG Mobile 0.10.0 update Vikendi Snow Map : பிளெயர்ஸ் அன்நோன்ஸ் பேட்டில் கிரவுண்ட் என்பதன் ஆங்கிலச் சுருக்கம் தான் இந்த பப்ஜி. ஆண்ட்ராய்ட் போன் உபயோகிப்பவர்களில் ஏராளமானோர் ஒருமுறையாவது இந்த பப்ஜி கேமினை விளையாடியிருப்பார்கள்.
Advertisment
போர் களத்தினை பின்னணியாக கொண்டு செயல்படும் இந்த விளையாட்டில், யாரென்றே தெரியாமல் இருக்கும் எதிரிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்பது தான் இந்த விளையாட்டின் அடிப்படை.
நேற்று முழுவதும், இந்த கேமின் சர்வர் முற்றிலுமாக டவுனாக இருந்தது. பின்பு ஆன்லைனில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் போது எக்கச்சக்க புது அப்டேட்டுகளுடன் கேம்கள் வெளியிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
PUBG Mobile 0.10.0 update Vikendi Snow Map தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம் பெற்றிருக்கிறது. ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் இந்த அப்டேட்டினை பெற உங்களின் போனில் 1.6ஜிபி சேமிப்பு பகுதியை ஃப்ரீ செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
PUBG Mobile 0.10.0 update Vikendi Snow Map என்றால் என்ன ?
எராங்கல், மிராமர், மற்றும் சன்ஹூக்கினைத் தொடர்ந்து இந்த அப்டேட்டில் நான்காவது புதிய வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது. 6x6 கி.மீ அளவுள்ள ஆர்டிக் பனிப்பிரதேசத்தின் வரைபடம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரைபடத்தின் பெயர் விகெண்டி வரைபடம் ஆகும். சன்ஹூக் வரைபடத்தினை விட பெரிய அளவிலும், எராங்கல் மற்றும் மிராமர் பகுதிகளோடு ஒப்பிடும் போது மிகச்சிறிய வரைபடமாகவும் இது உள்ளது.
டிசம்பர் 25ம் தேதிக்குள் இந்த அப்டேட்டினை பெறும் வாடிக்கையாளர்கள் Outfit Box III (7d) x1 and 1,888 BP-னைப் பெறுவார்கள். பப்ஜி விளையாட்டினை கம்ப்யூட்டரில் விளையாடுபவர்களுக்கு விகெண்டி வரைபடம் இன்று கிடைக்கும். எக்ஸ்பாக்ஸ் மற்றும் பி.எஸ்.4ரில் விளையாடுபவர்களுக்கு இந்த வரைபடம் (Vikendi Snow Map) ஜனவரி மாதம் தான் கிடைக்கும்.