PUBG Mobile Season 4 : இன்று ஆண்ட்ராய்ட் போன்கள் வைத்திருக்கும் அனைவரின் விருப்பமான வீடியோ கேம் என்றால் அது தான் பப்ஜி. ஆங்கிலத்தில் பப்ஜி என்பதன் விளக்கம் “Players Unknown’s BattleGround" - இது தான் ஆங்கிலத்தில் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது PUBG.
போர் களத்தினை பின்னணியாக கொண்டு செயல்படும் இந்த விளையாட்டில் எதிரில் இருக்கும் எதிரிகளை தாக்கி அழிக்க வேண்டும். அது தான் இந்த விளையாட்டின் அடிப்படை.
PUBG Mobile Season 4 பற்றி ட்வீட் செய்த நிறுவனம்
மூன்றாவது வெர்சனான பாட்டில் ராயல் கேம் (Battle Royale game) நாளையோடு முடிவிற்கு வருகின்ற நிலையில், 4வது வெர்சனை அப்டேட் செய்ய உள்ளது பப்ஜி. நவம்பர் 21ம் தேதி முதல் பப்ஜி ஆர்வலர்கள் 4வது வெர்சனை வெளியிட இருக்கிறது. அது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிக்கையை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறது பப்ஜி நிறுவனம்.
சீசன் 4ல் என்ன இருக்கிறது?
சீசன் 4 வெளியானால், அதில் வீக்லி சேலஞ்சுகள் இருக்கும். அதில் ஒரு கேமர் 100 ஆர்.பி. லெவல்கள் வரை விளையாடலாம். அதே போல் கேமர்கள் எலைட் அப்ட்கிரேட் மற்றும் எலைட் அப்கிரேட் ப்ளஸ் என இரண்டு விதமான அப்டேட்டுகளில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
M762 ரைஃபில்கள் இந்த பப்ஜி மொபைல் ஃபீச்சர் அப்டேட்டில் வர உள்ளது. பப்ஜியின் டெஸ்க்டாப் வெர்ஷனில் இருக்கும் ஸ்கூட்டர், சான்ஹூக்கின் டைனமிக் வெதர் ஆகிய அம்சங்கள் மொபைல்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி உருவானது பப்ஜி (PUBG) கேம்?
அயர்லாந்து நாட்டில் பிறந்த பிராண்டன் க்ரீன் என்பவர் தனக்கான தனிமை உலகத்தினை கற்பனையில் உருவாக்கி அதனோடு வாழ்ந்து வந்தவர். அந்த கற்பனைத் திறனின் அடிப்படையே பப்ஜி விளையாட்டு உருவாக காரணமாக அமைந்தது.
விலங்குகளின் வாழ்வியலை புகைப்படமாக எடுக்கும் புகைப்பட கலைஞராக திகழ்ந்த அவர் தன்னுடைய சொந்த வாழ்வில் எதிர்கொண்ட சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து அவரின் கற்பனை திறனுக்கு கிடைத்த பரிசு தான் இந்த பப்ஜி.