தடை செய்யப்படுகிறதா பப்ஜி கேம்? இது என்ன விளையாட்டு பிரியர்களுக்கு வந்த சோதனை!

இந்த விளையாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை வீண் செய்துவிடுவதாகவும் குற்றச்சாட்டு

பல பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடைபெறும் துறைகளில் கேமிங்கும் ஒன்று. கேமின் வடிவமைப்பும், கான்செப்ட்டும் ஓரளவு வெற்றிபெற்றுவிட்டாலே போதும். விளம்பரம், கேம் பர்சேஸ் என வெகு சுலபமாக மில்லியன் கணக்கான டாலர்களை அள்ளிவிடலாம்.

இந்த வர்த்தகத்தை மனதில் வைத்துத்தான் ஹாலிவுட் பட அளவிற்கு உழைப்பைக் கொட்டி கேம்களை உருவாக்கி வருகின்றனர் கேம் டவலப்பர்ஸ். அதிலும் 2018 ஆம் ஆண்டில் பெரும் வரவேற்பை பெற்ற கேம்களில் பப்ஜி தான் டாப் 1.

தடை செய்யப்படுகிறதா பப்ஜி கேம்?

தென் கொரியாவைச் சேர்ந்த ‘Bluehole’ என்ற நிறுவனம் இதனை வடிவமைத்தது.ஆண்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்கும் பப்ஜி வீடியோ கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் இந்த வீடியோ கேமிற்கு நாடுமுழுவதும் கிடைத்த வரவேற்பைப் போல காஷ்மீர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்த விளையாட்டிற்கு மாணவர்கள் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அங்குள்ள மாணவர்கள் கமிட்டியோ, ஜம்மு மற்றும் காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்கிடம் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் வழங்கப்பட்ட மனுவில் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களை அடிமையாக வைத்திருக்கும் என்பதே அவர்களது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த விளையாட்டை, போதை பொருட்களுக்கு அடிமையானது போல மாணவர்கள் விளையாடி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விளையாட்டால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய அப்டேட்டுடன் சூடு பிடிக்கும் பப்ஜி கேம்

இதுகுறித்து காஷ்மீரில் உள்ள மாணவர் குழுவின் துணை தலைவர் ராஃவிக் மாஃக்தீமி, பிரிஸ்ட்டின் காஷ்மீர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் குறைந்த மதிப்பெண்களை பார்த்தவுடனே இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த ஓரு உடனடி நடவடிக்கையோ அல்லது தடையோ எடுக்கப்படாதது ஏன்? ‘ என கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் மாணவர் சங்க தலைவர் அபரார் அகமது பாட் கூறுகையில், “அரசாங்கம் இந்த விவகாரத்தை உடனடியாக கையில் எடுக்க வேண்டும் என்றும், இந்த விளையாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை வீண் செய்துவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்’.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close