Advertisment

2025-ம் ஆண்டின் முதல் விண்கல் மழை: குவாட்ரான்டிட்ஸ் என்றால் என்ன? எங்கு பார்க்கலாம்?

First meteor shower of 2025: குவாட்ரான்டிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழ்கிறது.

author-image
WebDesk
New Update
meteor shower

2025-ம் ஆண்டின் முதல் விண்கல் மழை நிகழ உள்ளது. குவாட்ரான்டிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழ்கிறது. இது வருடம்  வருடம் நிகழும் மிகவும் அழகான விண்கல் காட்சிகளில் ஒன்றாகும். இதன் உச்சம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். 

Advertisment

குவாட்ரான்டிட்ஸ் என்றால் என்ன? 

குவாட்ரான்டிட் விண்கல் மழை, ஜனவரி தொடக்கத்தில் நிகழும் வருடாந்திர வான நிகழ்வாகும்.  இது அரிதான மற்றும் தீவிரமான விண்கல் மழைகளில் ஒன்றாகும். 

இது Boötes விண்மீன் கூட்டத்தின் வடகிழக்கு பகுதியின் ஒரு பகுதியாகும். குவாட்ரான்டிட்ஸ் என்ற பெயர் தற்போது வழக்கற்றுப் போன குவாட்ரான்ஸ் முரளிஸ் விண்மீன் தொகுப்பிலிருந்து வந்தது. இதற்கு 1975 ஆம் ஆண்டு பிரெஞ்சு வானியலாளர் ஜேஜே லாலண்டே பெயரிட்டார்.

Advertisment
Advertisement

அதன் உச்ச நடவடிக்கையில், பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 60 முதல் 120 விண்கற்களை பார்க்க முடியும். இருப்பினும், எங்கு பார்க்கிறீர்கள் எந்த நேரத்தில் பார்க்கிறீர்கள் என்பது பொறுத்து மாறுபடும். 

இந்தியாவில் பார்க்க முடியுமா?

இந்த ஆண்டு, வட அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் விடியற்காலையில் நன்கு பார்க்கலாம். 
இந்த விண்கற்கள் பூமியின் முன்னோக்கி எதிர்கொள்ளும் பக்கம் அதிவேகத்தில் தாக்குவதால் நன்கு பிரகாசிக்க வாய்ப்புள்ளது. நிலவொளி இல்லாத நிலையில், இது ஆண்டின் சிறந்த விண்கல் காட்சிகளில் ஒன்றாக இருக்கலாம்.

அமெரிக்கா, கனடா தவிர, வடக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவில் இந்த நிகழ்வை பார்க்க முடியும், இருப்பினும் தெரிவுநிலை மாறுபடலாம்.
ஜனவரி 4 ஆம் தேதி விடியற்காலையில் பார்க்க சிறந்த நேரம். 

கடந்த ஆண்டு, 2023 டிசம்பர் 28 முதல் ஜனவரி 12, 2024 வரை குவாட்ரான்டிட்ஸ் தென்பட்டது. ஜனவரி 3-4 அன்று உச்சம் ஏற்பட்டது. இந்த உச்சக்கட்டத்தின் போது, ​​பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 120 விண்கற்கள் வரை காண முடிந்தது. 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment