இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விண்வெளி மட்டுமல்லாது செவ்வாய் கிரகம், வீனஸ், நிலவு, சூரியன் என தனது லட்சிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஸ்பேஸ்டாக்கிங் திட்டம் மூலம் விண்வெளியில் 2 செயற்கை கோள்களை இணைந்து சாதனை படைத்தது.
அந்த வகையில் இஸ்ரோ பற்றி உங்களுக்கு தெரிந்தால் இந்த கேள்விகளுக்கு விடையளிங்கள்.
1. இஸ்ரோவின் தலைமையகம் எங்குள்ளது?
A) பெங்களூரு
b) ஹைதராபாத்
c) சென்னை
பதில்: A) பெங்களூரு
2. இஸ்ரோவுக்கு தனது முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த உதவிய நாடு எது?
A) அமெரிக்கா
b) சோவியத் ஒன்றியம்
c) பிரான்ஸ்
பதில்:b) சோவியத் ஒன்றியம்
3. சந்திரயான்-1 விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்ட ராக்கெட் எது?
A) பி.எஸ்.எல்.வி-சி11
b) GSLV Mk II
c) எஸ்.எல்.வி
பதில்: A) பி.எஸ்.எல்.வி-சி11
4. இந்தியாவின் செவ்வாய் கிரக திட்டத்தின் பெயர் என்ன?
அ) மங்கள்யான்
b) பிரக்யான்
c) சந்திராயன்
பதில்: A) மங்கள்யான்
5. சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்திய செயற்கைக் கோள் எது?
A) சந்திரயான்-2
b) மங்கள்யான்
c) ஆதித்யா-L1
பதில்: c) ஆதித்யா-எல்1
6. வீனஸை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் திட்ட பெயர் என்ன?
A) ஆதித்யா-L1
b) சந்திரயான்-3
c) சுக்ராயன்
பதில்: c) சுக்ராயன்