அந்த பழக்கம் நாட்டை விட்டு அகல காரணமே இந்த ராஜா தான்!!!

ராஜா ராம் மோகம் ராய் 246 பிறந்த நாள் கூகுள் டுடூளின் சிறப்பு

By: Updated: May 22, 2018, 12:54:47 PM

இன்றைய தினம்  கூகுள்  டூடுளில் இடம் பெற்றிருக்கும்  ராஜா ராம் மோகன் ராய் தான்  பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நாட்டை விட்டு  ஓட வைத்தவர்.

இந்திய சீர்த்திருந்தவாதிகளில் முதன்மையாக போற்றப்படுபவர்  தான் ராஜா ராம் மோகன் ராய்.  1772 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி   வங்காளத்தில் பிறந்தவர். சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை துவங்கியவர் இவரே ஆவார்.

கி.பி. 1828 இல் நிறுவப்பட்ட  முதல் சீர்திருத்த இயக்கம் இதுவே ஆகும்.  இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராக குரல் எழுப்பிய ராஜா ராம்,  பெண்களுக்கு எதிரான உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தை  நாட்டை விட்டு அகல வேண்டும் என்று முதலில் குரல்  கொடுத்தவர்.

பலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்திற்கும் எதிராக போராடினார். விதவைகள் மறுமணம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்பு திருமணம் ஆகியவற்றை ஆதரித்த ராஜாராம், சமுதாய மலர்ச்சி என்பதனை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும் என்று மோகன்ராய் உறுதியாக நம்பினார்.

சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த பொழுது மரணமடைந்தார். அங்கே எரிக்க வசதிகள் இல்லாததால் புதைக்கப்பட்டார்.

இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் இறைவனின் மகிமை மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் அவரின் நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்.
இந்து மதத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்த அவர், அன்றைய காலக்கட்டத்திலேயே பூர்வீக சொத்தில் பெண்களுக்கு உரிமை கோரினார்.  இத்தனை சிறப்புகளுக்கு சொந்த காரரான  ராஜா ராம் மோகன் ராயின் 246 ஆவது பிறந்தாளை கொண்டாடும் வகையில்  கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில்  அவரின்  புகைப்படத்தை வைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Raja ram mohan roy 246th birthday google doodle in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X