பதஞ்சலி நிறுவனம் சார்பில் பாபாராம் தேவ் , கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் மெசேஜ் அனுப்ப உதவும் மொபைல் செயலிகளில் முன்னணியில் இருப்பது ‘வாட்ஸ்-அப்’ செயலி தான். இன்றைய தொழில் நுட்ப உலகில் வாட்ஸ் அப் செயலி மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளது மறுக்க முடியாத உண்மை.
தற்போது, பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் , வாட்ஸ் அப்பிற்கு எதிராக கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிட்டு களத்தில் குதித்துள்ளார். மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இந்தியா முழுவது பதஞ்சலி என்ற நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்து வரும் பாபா ராம்தேவ், தற்போது தொழில் நுட்பத்திலும் களம் காண இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில், ஜியோவிற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து ‘சுதேசி சம்ரதி’ என்ற பெயரில் 4ஜி சிம்கார்டை அறிமுகப்படுத்தினார் . இதன் மூலம் பொதுமக்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு மற்றும் ரூ. 2.5 லட்சத்துக்கு விபத்து காப்பீடு அகியவை சிம் கார்டுடன் தரப்படுகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு அறிவிப்பாக வாட்ஸ் ஆப்பிற்கு சவால் விடும் ‘கிம்போ’ எனும் புதிய ஸ்மார்ட் போன் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார் பாபா ராம்தேவ். இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.