அக்டோபர் 14 அன்று அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் வானில் தோன்ற உள்ளது. இது 2012-க்குப் பிறகு முதல் முறையாக வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வானில் தோன்ற உள்ளது. மேலும் இந்த அரிய சூரிய கிரகணம் அடுத்து 2046-ம் ஆண்டில் தான் பார்க்க முடியும் என தி இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் நெருப்பு வளைய கிரகணம் தெரியும், மேற்கு அரைக்கோளத்தில் (Western Hemisphere) வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும். நாசா இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.
வெறும் கண்களால் பார்க்க கூடாது
நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை கட்டாயம் வெறும் கண்களால், கேமரா லென்ஸ், பைனாக்குளர் கொண்டு பார்க்க கூடாது. அப்படி செய்வது கண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் எனக நாசா கூறியுள்ளது. சூரியனைப் பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட specialised eye protection கண்ணாடிகளைக் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும் என அமெரிக்க விண்வெளி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நாசா வெளியிட்ட அறிவிப்பில், "கிரகணத்தின் போது வானம் மங்கலாக இருக்கும், முழு சூரிய கிரகணத்தின் போது முழுமையாக இருட்டாக இருக்காது. காற்று குளிர்ச்சியாக உணரலாம்" என்று கூறியுள்ளது.
இருப்பினும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாது. நாசாவின் நேரடி ஒளிபரப்பு மூலம் நிகழ்வை காணலாம். அக்டோபர் 14ம் தேதி இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் காணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“