ரேஷன் கார்டில் இதை செய்யாவிட்டால் பொருட்கள் கிடைக்காது; கடைசி தேதி இதுதான்!

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! உடனடியாக இ-கே.ஒய்.சி செயல்முறையை முடித்துவிடுங்கள்; இல்லை என்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! உடனடியாக இ-கே.ஒய்.சி செயல்முறையை முடித்துவிடுங்கள்; இல்லை என்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RATION CARD.jpg

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இன்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் இ-கே.ஒய்.சி (e-KYC) செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது. எனவே, ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் இ-கே.ஒய்.சி பதிவை உடனே செய்ய வேண்டும். ஆன்லைனில் இதனை எப்படி பதிவு செய்வது? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் (AAY) வறுமை கோட்டிற்கு கீழுள்ள ரேஷன் கார்டுகளுக்கு தலா 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதேபோல் பி.ஹெச்.ஹெச் (PHH) குடும்ப அட்டைகளைப் பொறுத்தவரை ஒரு நபருக்கு 5 கிலோ என அதிகபட்சம் ஒரு கார்டுக்கு 20 கிலோ வரை இலவச அரிசி வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் மற்றும் கிராமப்புறங்களில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 2 லட்சம் உள்ளவர்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். 

சொத்து வரம்பாக, நகர்ப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் சொந்தமாக டிராக்டர் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் இந்த ரேஷன் திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

இந்தநிலையில், இலவச அரிசி பெறும், இந்த 2 பிரிவு கார்டுதாரர்களின் குடும்ப தலைவர், உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் போன்றவற்றை அந்தந்த ரேஷன் கடைகளில் பதிவு செய்து, (இ-கே.ஒய்.சி) அனுப்ப மத்திய அரசு அறிவித்திருந்தது. அதாவது, அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க உத்தரவிட்டிருந்தது. இதற்காகவே, அனைத்து உறுப்பினரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

போலி ரேஷன் கார்டுகளை தடுக்கவும் (Duplicate/Fake Cards), தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கிடைப்பதை (Targeted PDS System) உறுதி செய்யவும், நியாவிலைக் கடைகளில் வெளிப்படைத்தன்மை (Transparency in PDS) கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-கே.ஒய்.சி பதிவை செய்ய மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. மேலும், அப்படி பதிவு செய்யாவிட்டால் இலவச அரிசி ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனவே, இன்னும் பதிவு செய்யாமல் உள்ளவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது அரசு மையத்திற்கு சென்று, ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை கொடுத்து, பயோமெட்ரிக் தரவை (கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன்) வழங்க வேண்டும். இதற்கு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை எடுத்துச் செல்ல வேண்டும். 

ஆன்லைன் மூலமாக இ-கே.ஒய்.சி செய்வதற்கான எளிய வழிமுறைகள்  

மாநில ரேஷன் கார்டு போர்டலான https://www.tnpds.gov.in/ என்ற பக்கத்திற்குச் சென்று, லாக் இன் செய்து கொள்ள வேண்டும்

உங்களது ரேஷன் கார்டு நம்பர், பாஸ்வேர்டு பதிவிட்டு உள்ளே நுழைந்து, "புதிய பயனர்" (New User) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்

பிறகு e-KYC ஆப்ஷனையும், "ஆதார் இணைப்பு (Aadhaar Linking)" அல்லது "இ-கே.ஒய்.சி புதுப்பிப்பு (e-KYC Update)" என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து, 12-இலக்க ஆதார் எண் (Aadhaar Number) பதிவிட வேண்டும். 

இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓ.டி.பி-ஐ பதிவிட வேண்டும் 

பின்னர் போட்டோ, உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்துவிட்டு, e-KYC-ஐ சமர்ப்பிக்க வேண்டும். 

இறுதியாக சமர்ப்பி (Submit) பட்டனை அழுத்தினால், உங்கள் செல்போனுக்கு "e-KYC Successful" என மெசேஜ் வரும். 

Ration shop Ration Card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: