100 மில்லியன் கிளிக், ஹைப்பர் ஸ்பீட் வயர்லெஸ்... ரேஸர் டெத்ஆடர் V4 ப்ரோ கேமிங் மவுஸ் அறிமுகம்!

ரேஸர் டெத்ஆடர் V4 ப்ரோ (Razer Death Adder V4 Pro) கேமிங்மவுஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-ஸ்போர்ட்ஸ் வல்லுநர்கள் மற்றும் போட்டி விளையாட்டுகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரேஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரேஸர் டெத்ஆடர் V4 ப்ரோ (Razer Death Adder V4 Pro) கேமிங்மவுஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-ஸ்போர்ட்ஸ் வல்லுநர்கள் மற்றும் போட்டி விளையாட்டுகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரேஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Razer DeathAdder

100 மில்லியன் கிளிக், ஹைப்பர் ஸ்பீட் வயர்லெஸ்... ரேஸர் டெத்ஆடர் V4 ப்ரோ கேமிங் மவுஸ் அறிமுகம்!

ரேஸர் டெத்ஆடர் V4 ப்ரோ (Razer DeathAdder V4 Pro) கேமிங்மவுஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-ஸ்போர்ட்ஸ் வல்லுநர்கள் மற்றும் போட்டி விளையாட்டுகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரேஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

ரேஸர் ஹைப்பர்ஸ்பீட் வயர்லெஸ் ஜென்-2 (Razer HyperSpeed Wireless Gen-2) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது முந்தைய தலைமுறை மாடலை விட 63% க்கும் அதிகமான ஆற்றல் திறனையும், குறைந்த லேட்டன்சியையும் (latency) வழங்குவதாகக் கூறப்படுகிறது. வலது கை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வயர்டு (wired) அல்லது வயர்லெஸ் (wireless) முறையில் பயன்படுத்தலாம். ஹைப்பர்ஸ்பீட் வயர்லெஸ் ஜென்-2 தொழில்நுட்பம் லேட்டன்சியை 37% வரை குறைப்பதாகவும், ஆற்றல் திறனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நிறுவனம் கூறுகிறது.

டாங்கில் (Dongle) புதிதாக வடிவமைக்கப்பட்ட டாங்கில் வயர்டு மற்றும் வயர்லெஸ் முறைகளில் 8,000Hz வரை துல்லியமாக செயல்பட முடியும். பேட்டரி ஆயுள் 8,000Hz இல் 22 மணிநேரம் வரை விளையாட்டு நேரத்தை வழங்குகிறது. 1,000Hz க்கு மாறும்போது பேட்டரி ஆயுள் 150 மணிநேரம் வரை அதிகரிக்கும். ஃபோகஸ் ப்ரோ 45K ஆப்டிகல் சென்சார் ஜென்-2 (Focus Pro 45K Optical Sensor Gen-2) இதில் பொருத்தப்பட்டுள்ளது. டிபிஐ (DPI), அதிகபட்ச உணர்திறன் 45,000 DPI.

அதிகபட்ச செயல்பாட்டு வேகம் 900 IPS, ஆப்டிகல் ஸ்க்ரோல் வீல், மெக்கானிக்கல் ஸ்க்ரோல் வீலை விட மூன்று மடங்கு துல்லியமானது மற்றும் நீடித்தது என்று கூறப்படுகிறது. 6 பட்டன்கள் மற்றும் ரேஸர் ஆப்டிகல் மவுஸ் சுவிட்சுகள் ஜென்-4 (Razer Optical Mouse Switches Gen-4) இதில் உள்ளன. இவை குறைந்த கிளிக் லேட்டன்சி மற்றும் பூஜ்ஜிய டிபவுன்ஸ் தாமதத்தை உறுதி செய்கின்றன. 100 மில்லியன் கிளிக்குகள் வரை நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. டைனமிக் சென்சிட்டிவிட்டி (Dynamic Sensitivity), மவுஸ் ரொட்டேஷன் (Mouse Rotation), மற்றும் சென்சிட்டிவிட்டி மேட்சர் (Sensitivity Matcher) போன்ற அம்சங்கள் போட்டி விளையாட்டுகளின் போது சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகின்றன. USB Type-A லிருந்து USB Type-C வழியாக வயர்டு இணைப்பை ஆதரிக்கிறது. அதற்கான கேபிளும் உடன் வருகிறது. கேபிள் மற்றும் டாங்கில் நீங்கலாக 56 கிராம் எடை கொண்டது.

Advertisment
Advertisements

ரேஸர் டெத்ஆடர் V4 ப்ரோ கேமிங் மவுஸின் விலை இந்தியாவில் ரூ.18,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இந்த கேமிங் மவுஸ் விரைவில் உள்ளூர் சில்லறை கடைகளில் விற்பனைக்கு வரும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: