ரியல்மி இன்று அதன் நம்பர் சீரிஸில் இரண்டு புதிய 5ஜி பட்ஜெட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 11 , ரியல்மி 11x ஸ்மார்ட் போன்கள் எல்.சி.டி திரையுடன் வருகின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 13 இன் அடிப்படையில் Realme UI 4.0 இல் இயங்குகிறது.
Advertisment
2 போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் மூலம் 6nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. 120Hz 6.72-இன்ச் IPS LCD ஸ்கீரின் கொண்டுள்ளது. Realme 11 ஆனது 3x லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 108MP ப்ரைமரி சென்சார் ர் கொண்டிருக்கும். அதே சமயம் Realme 11x ஆனது 2x ஜூம் கொண்ட 64MP கேமராவுடன் வருகிறது. இரண்டு போன்களிலும் 2MP டெப்த் சென்சார் மற்றும் 16MP செல்ஃபி ஷூட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
2 போன்களும் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. ஆனால் Realme 11 ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறுகிறது, அதேசமயம் Realme 11X -ல் 33W மட்டும் கொண்டுள்ளது.
ரியல்மி 11, ரியல்மி 11x விலை
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் Realme 11 அடிப்படை போன் விலை ரூ. 18,999. அதே சமயம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் போன் விலை ரூ.19,999 ஆகும்.
ரியல்மி 11x விலை குறைவான 5ஜி போன்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.14,999 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் மேலும் விலை குறைவாக வாங்க நிறுவனம் அறிமுக ஆஃபரா ரியல்மி 11 போனுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் ரியல்மி 11x போனுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இரண்டு போன்களும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. Realme 11 ஆகஸ்ட் 29ம் தேதியும், Realme 11x ஆகஸ்ட் 30-ம் தேதியும் விற்பனைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“