ரியல்மீ 2 தான் பெஸ்ட்... ரூ. 10,000ற்கும் குறைவான பட்ஜெட் போன்களில் முதலிடம் வகிக்கும் ரியல்மீ 2

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள் வாங்க விரும்புபவர்களுக்கு ரியல்மீ 2 நல்ல தேர்வாக இருக்கும்.

மிக நீண்ட நாட்களாக நல்லதொரு பட்ஜெட் போனிற்காக காத்திருப்பவர்களுக்கான சரியான தேர்வு என்பது ரியல்மீ 2 (Realme 2) தான்.

ரியல்மீ 1-ஐப் போலவே மார்கெட்டில் செம ஹிட் அடித்திருந்தாலும் ரியல்மீ 2 என்பது ரியல்மீ 1ன் லைட் வெர்சன் தான்.

ரூ. 8990க்கு கிடைக்கும் இந்த போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

திரை மற்றும் வடிவமைப்பு

6.2 அங்குல திரையுடன் வருகிறது ரியல்மீ 2. 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில், சூப்பர் வியூ நாட்ச் ஸ்கீரினுடன் வந்திருக்கும் முதல் போன் இது தான்.

முழுக்க முழுக்க நனோ ஸ்கேல் கம்போஸிட் மெட்டிரியலால் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த போன். 12 லேயர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த போன் பார்ப்பதற்கு மிகவும் க்ளோஸியாக இருக்கிறது.

கறுப்பு, நீலம், மற்றும் சிவப்பு நிறத்தில் வரும் இந்த போனில் பின்பக்க கேமரா மற்றும் கைரேகை சென்சார் இருக்கும் இடத்தில் சில்வர் ட்ரிமிங் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பேட்டரி மற்றும் ப்ராசஸ்ஸர்

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 450 புரோசஸ்ஸர் இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. பேட்டரியின் திறன் 4230 mAh ஆகும். 44 மணி நேரம் இந்த செல்போனை இயங்க வைக்கும் திறன் கொண்டது இந்த பேட்டரி.

கேமரா

13 எம்.பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்.பி இரண்டாவது கேமரா என பின்பக்க கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

முன்பக்க கேமரா 8 எம்.பி. ஆகும். செல்பி, போர்ட்ரை, டைம் லப்ஸ், எச்.டி.ஆர் மற்றும் பனோரமா மோட்களில் புகைப்படங்கள் எடுக்க மிகவும் ஏதுவான செல்பி கேமரா இது.

3GB RAM+32GB மற்றும் 4GB RAM+64GB என இரண்டு வேரியேசன்களில் வரும் இந்த போன் 10 ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்கள் வாங்க விரும்புபவர்களுக்கு ரியல்மீ 2 நல்ல தேர்வாக இருக்கும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close