நவம்பர் 20-ல் வெளியாகிறது ரியல்மியின் இரண்டு ஸ்மார்ட்போன்கள்!

ரியல்மி 5 ஸ்மார்ட்போனைப் போன்றே இந்த ஸ்மார்ட்போனின் கேமராவும் 48 எம்.பி. செயற்திறன் கொண்டவையாகும்.

By: November 13, 2019, 4:40:46 PM

Realme 5s smartphone specifications : ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போனான ரியல்மி 5எஸ் வருகின்ற நவம்பர் மாதம் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனும் வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டும் ஃப்ளிப்கார்ட் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 ஸ்மார்ட்போனைப் போன்றே இந்த ஸ்மார்ட்போனின் கேமராவும் 48 எம்.பி. செயற்திறன் கொண்டவையாகும்.

Realme 5s smartphone specifications

வெர்ட்டிகள் ரியர் கேமரா செட்-அப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர்பிரிண்ட் செட்டப் போனின் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குவாட் கேம் செட்டப்புடன் 8 எம்.பி. செகண்டரி கேமராவும், (119 டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிளை கொண்டது), 2 எம்.பி. அல்ட்ரா மேக்ரோ லென்ஸையும், 2 எம்.பி. போர்ட்ரைட் மோட் சென்சாரையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்நாப்ட்ராகன் 855+ பொருத்தப்பட்டுள்ளாது. மேலும் 12ஜிபி ரேம், 50வாட்ஸ் சூப்பர் வூக் ஃப்ளாஷ் சார்ஜர் சப்போர்ட்டையும் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் பேட்டரி செயல்திறன் 4000mAh ஆகும்.

மேலும் படிக்க : நவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Realme 5s smartphone specifications price launch availability and more

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X