scorecardresearch

அறிமுகம் ஆனது Realme 9 Pro சீரிஸ்: அசத்தல் அம்சங்கள், முழு விவரம் இதோ

Realme 9 Pro series launch: ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதன் விலை, சிறப்பு அம்சங்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

அறிமுகம் ஆனது Realme 9 Pro சீரிஸ்: அசத்தல் அம்சங்கள், முழு விவரம் இதோ

ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ 5ஜி, ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் மதியம் 1.30 மணியளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த 9 ப்ரோ + மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், இதய துடிப்பு சென்சார், கலர்-ஷிப்ட் டிசைன் போன்ற சிறப்பு அம்சங்களை ரியல்மி அறிமுகப்படுத்தியுள்ளது. மிட் ரெஞ்ச் 5ஜி மார்க்கெட்டில், இந்த ஸ்மார்ட்போன நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 9 ப்ரோ 5ஜி சிறப்பு அம்சங்கள்

  • 6.6-இன்ச் முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி
  • ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர்
  • ரியல்மி UI 3.0
  • ஆண்ட்ராய்டு 12
  • 120Hz அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே
  • 6ஜிபி , 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 64 எம்.பி முதன்மை கேமரா, 8 எம்.பி அல்ட்ராவைட் கேமரா, 2 எம்.பி மேக்ரோ கேமரா என மூன்று பின்புற கேமராக்கள்
  • 16எம்.பி செல்பி கேமரா
  • 5000mah பேட்டரி
  • 33W Dart சார்ஜிங்

விலை விவரம்

  • 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் – ரூ17,999
  • 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் – ரூ20,999

மிட்நைட் பிளாக், அரோரா கிரீன் மற்றும் சன்ரைஸ் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்திலும், ரியல்மி தளத்திலும், ஆப்லைன் கடைகளிலும் விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி விவரங்கள் சிறப்பு அம்சங்கள்

  • 6.4-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ரியல்மி UI 3.0, ஆண்ட்ராய்டு 12
  • மீடியாடெக் டைமன்சட்டி 920 SoC பிராசஸர்
  • 6ஜிபி, 8ஜிபி ரேம்
  • 128ஜிபி, 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • 50MP Sony IMX766 main sensor முதன்மை கேமரா, 8 எம்.பி அல்ட்ராவைட் கேமரா, 2 எம்.பி மேக்ரோ கேமரா என மூன்று பின்புற கேமராக்கள்
  • 16 எம்.பி செல்பி கேமரா
  • 4500mah பேட்டரி
  • 60w பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்

விலை விவரம்

  • 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.24,999 ; அறிமுக சலுகையாக ரூ17,499
  • 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.26,999 ; அறிமுக சலுகையாக ரூ18,899
  • 8ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ28,999 ; அறிமுக சலுகையாக ரூ20,299

மிட்நைட் பிளாக், அரோரா கிரீன் மற்றும் சன்ரைஸ் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்திலும், ரியல்மி தளத்திலும், ஆப்லைன் கடைகளிலும் விற்பனைக்கு வருகிறது.

இதையும் படிங்க: தினமும் அலெக்சாவிடம் இதை பற்றி 11 ஆயிரம் கேள்விகளை கேட்ட இந்தியர்கள்… என்ன தெரியுமா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Realme 9 pro series launched in india

Best of Express