50 மணிநேர பேட்டரி, நாய்ஸ் கேன்சலேஷன்: ரியல்மி பட்ஸ் T200-ன் மிரட்டல் அம்சங்கள்!

சீன தொழில்நுட்ப நிறுவனமான ரியல்மி, தனது புதிய 'ரியல்மி பட்ஸ் T200' ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்களை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சீன தொழில்நுட்ப நிறுவனமான ரியல்மி, தனது புதிய 'ரியல்மி பட்ஸ் T200' ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்களை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

author-image
WebDesk
New Update
Realme Buds T200

50 மணிநேர பேட்டரி, நாய்ஸ் கேன்சலேஷன்: ரியல்மி பட்ஸ் T200-ன் மிரட்டல் அம்சங்கள்!

சீன தொழில்நுட்ப நிறுவனமான ரியல்மி, தனது புதிய 'ரியல்மி பட்ஸ் T200' ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்களை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 வண்ணங்களில் 12.4mm டைனமிக் டிரைவர்களுடன் ரியல்மி பட்ஸ் T200 வெளிவரும் என டீசர்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதியும் இதில் உள்ளது. சார்ஜிங் கேஸுடன் சேர்த்து ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 50 மணி நேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று ரியல்மி உறுதியளித்துள்ளது.

Advertisment

ரியல்மி பட்ஸ் T200 TWS இயர்போன்கள், 24-ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவை ட்ரீமி பர்பிள், நியான் கிரீன், மிஸ்டிக் கிரே, ஸ்னோயி ஒயிட் ஆகிய 4 வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அறிமுகத்திற்குப் பிறகு, இந்த இயர்போன்கள் Realme.com மற்றும் Flipkart வழியாக விற்பனைக்கு வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயர்போன்களின் முக்கிய அம்சங்கள்:

இதில் 12.4mm டைனமிக் டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 20Hz முதல் 40,000Hz வரையிலான அதிர்வெண் வரம்பை (frequency response) ஆதரிக்கின்றன. மேலும், இது 'ஹை-ரெஸ் ஆடியோ' சான்றிதழ் மற்றும் 3D ஸ்பேஷியல் ஆடியோ அனுபவத்தையும் வழங்குகிறது. இதில் நான்கு மைக்ரோஃபோன்கள் கொண்ட அமைப்பு (quad mic system), 32dB வரை தேவையற்ற இரைச்சலைக் குறைக்கும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதியும் உள்ளது. இதில் 45ms வரையிலான குறைந்த தாமதத்துடன் (low-latency) கூடிய பிரத்யேக கேம் மோடு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ப்ளூடூத் 5.4 இணைப்பு மற்றும் LDAC கோடெக் ஆதரவுடன் வருகிறது. தூசி மற்றும் நீர் புகாத தன்மைகாக IP55 மதிப்பீடு பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 2 சாதனங்களில் இணைக்கும் (dual device connectivity) வசதியும் இதில் உள்ளது. சார்ஜிங் கேஸுடன் சேர்த்து 50 மணிநேரம் வரை மொத்த பேட்டரி ஆயுளை வழங்கும். ANC இயக்கப்பட்டிருக்கும் போது, 35 மணிநேரம் வரை நீடிக்கும். 10 நிமிட சார்ஜில் 5 மணிநேரம் வரை இசையைக் கேட்க முடியும் என ரியல்மி கூறுகிறது. இந்த இயர்போன்களுடன் அறிமுகமாகும் ரியல்மி 15 5G மாடல், மீடியாடெக் டைமன்சிட்டி 7300+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதன் ப்ரோ மாடலான ரியல்மி 15 ப்ரோ 5G, சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் உடன் வெளிவர உள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: