6,300mAh பேட்டரி, 6GB ரேம்... ரூ.5,000 பட்ஜெட்டில் ஃபிங்கர் சென்சாருடன் கலக்கும் ரியல்மீ!

இந்தியாவில் வெளியாகியுள்ள ரியல்மீ சி-71 சக்திவாய்ந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன். இதில் 6.74-இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இது மென்மையான பார்வை அனுபவத்தை உறுதி செய்கிறது.

இந்தியாவில் வெளியாகியுள்ள ரியல்மீ சி-71 சக்திவாய்ந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன். இதில் 6.74-இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இது மென்மையான பார்வை அனுபவத்தை உறுதி செய்கிறது.

author-image
WebDesk
New Update
realme C71

6,300mAh பேட்டரி, 6GB ரேம்... ரூ.5,000 பட்ஜெட்டில் ஃபிங்கர் சென்சாருடன் கலக்கும் ரியல்மீ!

அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் சந்தைக்கு வந்திருக்கிறது ரியல்மீ சி-71. பெரிய ஸ்கிரீன், பேட்டரி மற்றும் சீரான செயல்திறன் என இந்தியாவின் அன்றாடப் பயனர்களுக்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

Advertisment

6.74-இன்ச் HD+ (720*1600) டிஸ்ப்ளே சினிமா அனுபவத்தை மேம்படுத்தும். 90Hz ரெஃப்ரெஷ் ரேட் இருப்பதால், ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் போன்ற வேலைகளை மிக மென்மையாகவும், துல்லியமாகவும் உணர்வீர்கள். ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே என்றாலும், 563 nits உச்சபட்ச பிரைட்னஸுடன், வெளிச்சமான இடங்களிலும் திரையைத் தெளிவாக பார்க்க முடியும். ரியல்மீ சி-71ன் இதயம் எனச் சொல்லப்படும் UNISOC T7250 சிப்செட், அதன் 8-கோர் CPU (1.8 GHz வரை) மற்றும் Mali-G57 MP1 GPU மூலம் அன்றாடப் பயன்பாடுகளுக்கும் மிதமான கேமிங்கிற்கும் தேவையான சீரான செயல்திறன் வழங்குகிறது.

4GB+64GB RAM, 6GB+128GB உள் சேமிப்பு உள்ளது. மேலும், இதில் பெரிய MicroSD கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேமிப்பை 2TB வரை எளிதாக நீட்டிக்கலாம். இந்த போனில் உள்ள 6,300mAh பேட்டரி ஒருநாள் பயன்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், 15W வயர்டு சார்ஜிங் வசதி இருப்பதால், தேவைப்படும் போது விரைவாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.

ப்ளிப்கார்ட்டில் இந்தப் போனின் விலை ரூ.7,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உங்க பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம், ரூ.3,500 வரை கிடைக்கும். அதுபோக, கிரெடிட் கார்டு ஆபர்ஸ் உள்ளது. மொத்தமாக ரூ.3,000 வரை தள்ளுபடி கிடைக்கும். அதனால், இந்தப் போனின் விலை ரூ.5,000-க்கே வாங்காலாம்.

Advertisment
Advertisements

இது பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோனாக இருந்தாலும், உங்கள் முக்கியமான தருணங்களை க்ளிக் செய்ய தேவையான கேமராக்கள் இதில் உள்ளன. 13MP பின்புற கேமரா, 5MP முன்புற செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஃபோன் புதிய Android 15 இயங்குதளத்துடன், Realme-ன் பிரத்யேக Realme UI-இல் இயங்குகிறது. ஃபோனை திறக்க வசதியான பக்கவாட்டில் அமைக்கப்பட்ட கைரேகை சென்சார் இதில் உள்ளது. ஐபி 54 நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன் இருப்பதால், லேசான தூறல்கள் அல்லது தூசி நிறைந்த சூழல்களில் இருந்தும் உங்கள் ஃபோன் பாதுகாப்பாக இருக்கும். டூயல் சிம் 4G இணைப்பு, Wi-Fi, ப்ளூடூத் 5.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவையும் இதில் உள்ளன.

5G Samrtphones

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: