வரும் நாட்களில் போன் வாங்க நினைக்கிறீர்களா? பட்ஜெட் முதல் மிட்-ரேஞ்ச் முதல் ஃபிளாக்ஷிப் வரை, இந்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் சில ஸ்மார்ட்போன்கள் இங்கே.
Realme GT 6
Realme GT 6 ஆனது ஜூன் 20 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போன் Snapdragon 8s Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme GT Neo 6T ஐப் போலவே இருக்கலாம், அதாவது 6.78 இன்ச் 120Hz AMOLED ஸ்க்ரீன் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் விலை உள்பட மற்ற விவரங்கள் வெளியிடப்பட வில்லை.
Xiaomi 14 Civi
Xiaomi 14 Civi சீரிஸ் போன் ஜூன் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியானது. Xiaomi 14 Civi ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் ஓ.எஸ்-ல் இயங்கும் என்று கூறப்படுகிறது.
Xiaomi 14 Civi ஆனது 50MP ப்ரைமரி கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைட் சென்சார் கொண்ட லைக்கா-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் கேமரா அமைப்பைப் பெறும் என்று கூறப்படுகிறது.
மேலும், சரியான விலை இன்னும் தெரியவில்லை என்றாலும், Xiaomi 14 Civi விலை ரூ. 50,000க்கு குறைவாக இருக்கும் ஃபிளாக்ஷிப் போனாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Vivo X Fold3 Pro
சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Viv X Fold3 Pro ஆனது Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயங்கும் புக்-ஸ்டைல் ஃபோல்டபுள் போனாகும். இந்தியாவில் அறிமுக செய்யப்படும் இந்த போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போனின் சிப்செட் பெறுமா? அல்லது வேறுபடுமா எனத் தெரியவில்லை.
இது 8.03-இன்ச் 120Hz AMOLED ஸ்க்ரீன் கொண்டுள்ளது. 4,500 nits உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது, இது largest foldable போன்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில், 21:9 என்ற விகிதத்துடன் 6.53-இன்ச் 120Hz AMOLED திரையைப் பெறுவீர்கள். இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வரலாம்.
ஃபோனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா, 645எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50எம்பி அல்ட்ராவைடு சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் ஜெய்ஸால் டியூன் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,700mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.
இன்று, ஜுன் 6-ம் தேதி Vivo X Fold3 Pro இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் விலை பற்றி விவரங்கள் வெளியாகவில்லை .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“