ஐபோனுக்கு இணையான ரியால்மி நிறுவனம் ரியால்மி ஜி.டி 7 ப்ரோ என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போ இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசஸர் கொண்டுள்ளது. ப்ராசஸர் நன்றாக உள்ளது. இருப்பினும் அதிகம் பயன்படுத்தும் போது Heat ஆகிறது. 51 டிகிரி வரை வெப்பம் ஏற்படுகிறது.
அதே போன்று இது ஒரு கேமிங் போனாகும். முதல் 30 நிமிடங்கள் எந்த Lacking-ம் ஏற்பட வில்லை. அதன் பின் Heat ஆகிறது, Lack பிரச்சனை ஏற்படுகிறது. அதிக திறன் கொண்ட கேமிங் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சாதாரண கேமிங்கிற்கு இந்த பிரச்சனை இருக்காது. பப்ஜி கேம் விளையாடும் போது 1 மணி நேரம் வரை எந்த வித Heat, Lacking பிரச்சனை இருக்காது என தமிழ் டெக் ரிவ்யூ கூறியுள்ளார்.
போன் பாதுகாப்பிற்கு கெரில்லா கிளாஸ் 7i கொடுக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா சோனிங் Finger Print sensor, டூயல் சிம் கார்டு வசதி உள்ளது. ஐ.பி.69 ரேட்டிங் உள்ளது. அதனால் நீருக்குள் சென்று கூட போட்டோ எடுக்கலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.
6.78 இன்ச் Quad curve டிஸ்பிளே உள்ளது. 120HZ ரெஃப்பிரஸ் ரேட் உள்ளது. 5800mAh நல்ல பெரிய சைஸ் பேட்டரி உடன் இந்த போன் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“