Realme நிறுவனம் Coca Cola உடன் இணைந்து புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Realme 10 Pro போனில் Coca-Cola குளிர்பான நிறுவனத்தின் கலர், டிசைன், பிராண்டிங் தனித்துவத்தையும் வழங்கியுள்ளது. அதன்படி ரியல் மீ 10 பிரோ பின்புறம் Coca Cola நிறுவனத்தின் பெயர் பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. கோகோ கோலா-வை நினைவூட்டும் வகையில் சிவப்பு கலர் கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
Realme 10 Pro Coca-Cola எடிஷன் வாங்குபவர்களுக்கு ஸ்பேஷல் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. அதில் சார்ஜர், கேபிள் மற்றும் Coca Cola Drink கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் Realme 10 Pro Coca-Cola எடிஷன் 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.20,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று முதல் Realme அதிகாரப்பூர்வ வெப்சைட் தளத்தில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
Coca-Cola எடிஷன் இல்லாத ரியல் மீ 10 ப்ரோ போன் 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.18,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.19,999 ஆகும்.
ரியல் மீ - கோகோ கோலா போன் சிறப்பம்சம்
Realme-Coca-Cola போன் புதிய தீம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கோகோ கோலா ரிங்டோன் கொண்டுள்ளது. செயல்திறனைப் பொறுத்தவரை, Realme 10 Pro 5ஜி கோலோ கோலா போன் 5000mAh பேட்டரி, 108-மெகாபிக்சல் கேமரா மற்றும் 6.72-இன்ச் IPS LCD டிஸ்பிளே கொண்டுள்ளது. கோகோ கோலா எடிஷன் ஸ்னாப்டிராகன் 695 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 33W பாஃஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.