Realme Narzo 70 Turbo 5g: ரியல்மி நார்ஃசோ 70 சீரிஸில் அந்நிறுவனம் புதிதாக ஒரு பட்ஜெட் போன் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் இன்று ரியல்மி நார்ஃசோ 70 டர்போ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி நார்ஃசோ 70 டர்போ சிறப்பம்சங்கள், விலை
Realme Narzo 70 Turbo மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Turbo Yellow, Turbo Green மற்றும் Turbo Purple ஆகிய நிறங்களில் உள்ளது. இந்த மூன்றும் வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதிகளை கொண்டுள்ளது. 6GB+128GB, 8GB+128GB, மற்றும் 12GB+256GB ஆகிய காம்போவில் வருகிறது. “ஹ
இவற்றின் விலை ரூ.16,999, ரூ.17,999 மற்றும் ரூ.20,999 ஆகும். செப்டம்பர் 16, மதியம் 12 மணி முதல் அமேசான், ரியல் மி தளத்தில் விற்பனைக்கு வருகிறது. தீபாவளிக்கு முன் ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம்.
Realme Narzo 70 Turbo ஆனது Dimensity 7300 எனர்ஜி 5G சிப்செட் மற்றும் 12GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 3.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 இல் இயங்குகிறது.
இது 6.67-இன்ச் OLED Esports டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2,000nits உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“