ஈரமான கையால் கூட இனி போன் யூஸ் பண்ணலாம்... வாட்டர் ப்ரூஃப் வசதியுடன் அறிமுகமாகிறது ரியல்மி பி3 லைட் 5ஜி!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான P3 லைட் 5G-ஐ இந்தியாவில் செப்.13 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இதில், மீடியா டெக் டைமென்சிட்டி 6300 5G சிப்செட், 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான P3 லைட் 5G-ஐ இந்தியாவில் செப்.13 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இதில், மீடியா டெக் டைமென்சிட்டி 6300 5G சிப்செட், 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

author-image
WebDesk
New Update
Realme P3 Lite 5G

ஈரமான கையால் கூட போன் யூஸ் பண்ணலாம்... வாட்டர் ப்ரூஃப் வசதியுடன் அறிமுகமாகிறது ரியல்மி பி3 லைட் 5ஜி!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான P3 லைட் 5G-ஐ இந்தியாவில் செப்.13 அன்று அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவே, ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வண்ண விருப்பங்களை ரியல்மி தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.

ரியல்மி P3 லைட் 5G-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Advertisment

சிப்செட்: சக்திவாய்ந்த MediaTek Dimensity 6300 5G சிப்செட் செயல்படுகிறது. இது அதிவேகமான 5G இணைப்புடன், அன்றாட பயன்பாடுகளையும், சிக்கலான செயல்பாடுகளையும் மிகச் சிறப்பாக கையாளும் திறன் கொண்டது.

பேட்டரி: இன்றைய வேகமான உலகில், சார்ஜ் தீர்ந்துவிடுமோ? என்ற கவலை இல்லாமல் ஒரு நாள் முழுவதுக்கும் பேட்டரி நீடிக்க வேண்டும். ரியல்மி P3 லைட் 5G இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதில் உள்ள 6,000mAh பேட்டரி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 54 மணிநேரத்திற்கு மேல் பேசும் நேரத்தையும், 833 மணிநேரத்திற்கு மேல் ஸ்டாண்ட்-பை நேரத்தையும் வழங்குகிறது. மேலும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 6,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இதுவே மிகவும் மெல்லிய வடிவமைப்பு (7.94mm) கொண்டது என்று ரியல்மி கூறுகிறது.

ரியல்மி P3 லைட் 5G-ன் வடிவமைப்பும், பிற அம்சங்களும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. அதன் 6.67 இன்ச் HD+ டிஸ்பிளே துடிப்பான வண்ணங்களையும், தெளிவான காட்சிகளையும் வழங்குகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இருப்பதால், ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவம் மிகவும் மென்மையாக இருக்கும். 

Advertisment
Advertisements

கேமரா: பின்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமராவும், முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் சிறந்த படங்களை எடுக்க உதவுகின்றன. மேலும், மழைக்கால பயன்பாட்டை எளிதாக்க, "Rainwater Smart Touch" போன்ற பல ஏ.ஐ. அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஈரமான கைகளுடன் கூட திரையைத் தொடுவதற்கு வசதியாக உதவுகிறது. மேலும், IP64 தரச் சான்றிதழ் பெற்று, தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கு உறுதி அளிக்கிறது.

மெமரி: 6GB ரேம்+128GB ஸ்டோரேஜ் வசதி இருக்கும். மேலும், 18GB வரை மெய்நிகர் ரேம் (virtual RAM) ஆதரவு இருப்பதால், மல்டி-டாஸ்கிங் செய்வது இனி ஒரு சவாலே இல்லை. பல செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், ஸ்மார்ட்போனின் வேகம் குறையாது.

சாப்ட்வேர்: ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 இயங்குதளத்துடன் வரும். இதில் பல ஏ.ஐ. அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, "Rainwater Smart Touch" என்ற அம்சம், ஈரமான கைகளுடன் திரையைச் சீராகப் பயன்படுத்த உதவுகிறது. இந்த ஸ்மார்ட்போன் லிட்டில் ஒயிட் (Lily White), பர்ப்பிள் ப்ளாசம் (Purple Blossom), மற்றும் மிட்நைட் லிலி (Midnight Lily) ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: