Realme smart tv tamil news, realme smart tv 43 inch price: இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ரியல்மீ நிறுவனம் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஸ்மார்ட்போன்கள் பிரிவில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ரியல்மீ நிறுவனம், ஆடியோ தயாரிப்புகள், ஸ்மார்ட் வாட்ச், பிட்னெஸ் பேண்ட்கள் ஏன் ஸ்மார்ட் டிவிக்கள் தயாரிப்பு வரை தற்போது இறங்கிவிட்டது.
ரியல்மீ நிறுவனம் தற்போதைய அளவில் 32 இஞ்ச் மற்றும் 43 இஞ்ச் அளவுகளில் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்து வரும் நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில், விரைவில் 55 இஞ்ச் டிவியை அறிமுகம் செய்ய உள்ளதாக ரியல்மீ இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.
மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிக்களை ஒப்பிடும்போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக கையாளும் விதத்தில் ரியல்மீ 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவி அமைந்துள்ளது.
Realme Smart TV 43-inch specifications
43 இஞ்ச் பெசல் லெஸ் எல்இடி டிஸ்பிளே, குரோமா பூஸ்ட் பிக்சர் இஞ்ஜின், 24 வாட்ஸ் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, சர்டிபைட் ஆண்ட்ராய்ட் டிவி கூகுள் அசிஸ்டெண்ட் பிளஸ் குரோம்காஸ்ட் பில்ட் இன், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் பில்ட் இன், 64 பிட் குவாட் கோர் புராசசர், 1GB+8GB
Realme Smart TV 43-inch: பலம் மற்றும் பலவீனம் என்ன?
ரியல்மீ ஸ்மார்ட் டிவியின் விலை சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட் டிவிக்களின் விலையை ஒத்திருந்தாலும், இந்த டிவியை கையாள்வது மிக எளிதாக உள்ளது. இந்த டிவியை, நாமளாகவே இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். டிவியை இன்ஸ்டால் பண்ணுவதற்கு தேவையான போல்ட்கள், நட்டுகள் போன்றவைகள் பாக்ஸிலேயே வந்துவிடுவதால் தனியாக எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. அந்த பாக்ஸில் டிவி ஸ்டாண்டும் வருகிறது, இதனை நாமே எளிதாகவே மாட்டிவிடலாம். ஸ்மார்ட் டிவியை, சுவற்றில் மாட்ட வேண்டுமென்றால் மட்டும் அதற்கான ஷாக்கெட்டை, நாம் தனியாக வேண்டியது வரும்.
ரியல்மீ ஸ்மார்ட் டிவியில் திரை மிகச்சிறந்த பலன் ஆகும். இதில் உள்ள வண்ணங்கள் ஆச்சரியத்தக்க வகையில் உள்ளது. 1080p ஹெச்டிஆர் வசதி உள்ளது. ஹெச்டிஆர் 10 பார்மேட் சபர்போர்ட் செய்யும் விதத்தில் உள்ளபோதிலும், இதில் குறை என்னவென்றால், 4கே வசதி இல்லை என்பதே ஆகும்.
பெரும்பாலான ஸ்மார்ட் டிவிக்களில், தடிமனான பெசல்கள் உள்ளநிலையில், ரியல்மீ ஸ்மார்ட்டிவியில், 3 பக்கங்களில் குறைவான அளவிலேயே பெசல்கள் உள்ளன.
ஸ்மார்ட் டிவிக்களில் சவுண்ட் சிஸ்டத்தில் குறைபாடு இருக்கும் என்று பலர் தெரிவித்து வரும் நிலையில், அந்த குறை ரியல்மீ ஸ்மார்ட் டிவியில் களையப்பட்டுள்ளது. 24 வாட்ஸ் சவுண்ட் சப்போர்ட், 4 ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் டால்பி ஆடியோ சப்போர்ட் இதில் உள்ளது.
ரியல்மீ ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்ட் டிவி இன்டர்பேசிலேயே இயங்குவதால், அனைத்து வகை ஸ்டிரீமிங் சேவைகள், ஆப்ஸ்கள், ஆன்லைன் கேம்கள் உள்ளிட்டவைகள் விளையாட வசதியாக இருக்கின்றது. இந்த டிவியில், யூடியூப், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்றவைகள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளன. ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோரில் உள்ள மற்ற ஆப்ஸ்கள் உள்ளிட்டவற்றை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். டிவி, ஸ்டிரிமிங் சர்வீஸ் மாறும்போது சிறிது நேரம் ஆகிறது என்பதை மறுக்க இயலாது.
ஸ்மார்ட் டிவியுடன், ஹெச்டிஎம்பி போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், லான் போர்ட், ஆன்டென்னா ஷாக்கெட், டினிட்டல் ஆடியோ அவுட் ஆர்சிஏ போர்ட், 3.5 மிமீ ஏவி கனெக்டர், ஹெட்போன்கள் அல்லது ஸ்பீக்கர்களை இணைக்கும் விதத்திலான 3.5 மிமீ ஜேக் உள்ளது.
ரியல்மீ ஸ்மார்ட் டிவியின் ரிமோட் மிக அடிப்படை அளவிலேயே உள்ளது. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், யூடியூப், கூகுள் அசிஸ்டெண்ட், சவுண்ட் அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்டவைகளுக்கென்று தனியாக பட்டன்கள் உள்ளன.
ரிமோட்டில் உள்ள பல பட்டன்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று டுவிட்டரில் பலர் புகார் தெரிவித்திருந்த நிலையில், எனது ரிமோட்டில், ஒரு பட்டன் மட்டும் சரியாக வேலை செய்யவில்லை, செட்டிங்ஸ் மாற்றுவதற்கான அந்த பட்டன் முற்றிலுமாக வேலை செய்யவில்லை.
ரியல்மீ ஸ்மார்ட் டிவியில் குரோம்கேஸ்ட் வசதி இருப்பதால், திரையை நாம் அதனுடன் சப்போர்ட் செய்யும் மற்ற டிவைஸ்களிலும் பார்த்து மகிழலாம். ரிமோட் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக உள்ளது.
ஏன் இதை வாங்கலாம்?
முதன்முதலாக ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு, ரியல்மீ ஸ்மார்ட் டிவி சரியான தேர்வு ஆகும். இதன் எளிய வடிவைமப்பு, அனைவரும் எளிதில் இயக்கும் வகையிலான அமைப்பு உள்ளிட்டவைகள் அனைவரையும் எளிதில் கவரும் வகையில் உள்ளது. இருந்தபோதிலும் டிவியை அப்டேட் செய்யும் போது சில சாப்ட்வேர் பிரச்சனைகள் வருகின்றன.
ரியல்மீ 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் பட்ஜெட் இதைவிட குறைவு எனில், ரியல்மீ 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். டிஸ்பிளே மட்டுந்தான் வேறுபடுகிறதே தவிர, மற்ற எந்த விஷயங்களிலும் எவ்வித மாறுபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.