Advertisment

ரியல்மீயின் முதல் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஸ்மார்ட்போன் அறிமுகம்... இந்தியாவில் எப்போது வெளியீடு?

இந்தியாவில் வெளியாகும் இந்த போன் ரூ.18,000க்கு விற்பனை செய்யப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Realme X Specifications, Price, Camera Features, Launch

Realme X Specifications, Price, Camera Features, Launch : ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனத்தின் இந்திய செயல் அதிகாரி மாதவ் ஷேத் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சீனாவில் வெளியாகி செம்ம ஹிட் அடித்திருக்கும் இந்த போன், வேறுபட்ட சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார் அவர்.

Advertisment

Realme X Specifications, Price, Camera Features, Launch

எப்போது வெளியாகலாம் என்பதை தெளிவாக விளக்கவில்லை. ஜூலை முதல் வாரத்தில் இருந்து டிசம்பர் இறுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாகும் இந்த போன் ரூ.18,000க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Realme X Specifications

6.5 இன்ச் ஃபுல் எச்.டி + பெசல் இல்லாத ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது

ரெசலியூசன் - 2340 x 1080 பிக்சல்கள் ஆகும்

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது

ரியல்மீயின் முதல் இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ஆட்ரெனோ 616 கிராஃபிக்ஸ் பிராசர் யூனிட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கலர்ஓஎஸ் 6 ஸ்கினில் (ColorOS 6 skin) இயங்குகிறது இந்த போன்.

3,765mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி

Realme X Camera

இரட்டை பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 48 எம்.பி. பிரைமரி சென்சாரும், 5எம்.பி. டெப்த் சென்சாரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

செல்ஃபி கேமரா 16எம்.பி. ஆகும்.

Realme X Storage Varients and Price

மூன்று வித்தியாசமான ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் இந்த போன் வெளிவர உள்ளது.

4GB RAM/64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,499 யுவான் (ரூ.15,000)

6GB RAM/64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,599 யுவான் (ரூ.16,000)

8GB RAM/128GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,799 யுவான் (ரூ.18,000)

மேலும் படிக்க : அறிமுக விழாவிற்கு முன்பே போனை வாடிக்கையாளருக்கு விற்ற அமேசான்… அதிர்ச்சியில் மோட்டோ…

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment