Realme X Spiderman Edition Smartphone Specifications, Price, Camera features, Launch : சீனாவில் ஸ்பைடர்மேன் எடிசனில் ரியல்மீயின் X ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. வருகின்ற 9ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது. ரியல்மீ எக்ஸ் போனில் இருந்து எந்த விதமான மாறுதல்களையும் இந்த போன் பெற்றிருக்கவில்லை. கலர் மற்றும் ஸ்மார்ட்போன்களின் தீம் மட்டும் ஸ்பைடர்மேன் படத்தின் இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளது.
Realme X Spiderman Edition Smartphone சிறப்பம்சங்கள்
திரை 6.5 இன்ச் அளவு கொண்ட ஃபுல் எச்.டி. + ஏ.எம்.ஒ.எல்.ஈ.டி திரையாகும்
ரெசலியூசன் : 2340 x 1080 பிக்சல்கள்
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசரும், ஆட்ரெனோ 616 ஜி.பி.யூ ப்ரோசசரும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஒரிஜனல் போன் வெளியானது. பாப் அப் செல்ஃபி கேமராவுடன் வரும் முதல் ரியல்மீ போன் இதுவாகும்.
பின்பக்க முதன்மை கேமரா 48 எம்.பி. செயல்திறன் கொண்டவை.
அதே போன்று இதன் பிங்கர் பிரிண்ட் ரீடர் திரையின் உள்ளே வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை 1,799 யுவான் ஆகும். (இந்திய மதிப்பில் இதன் விலை 18,063)
ஸ்பெசல் எடிசன் என்பதால் அதிக வாடிக்கையாளர்களின் கைகளுக்கு இந்த போன் சென்று சேராது என்பது கொஞ்சம் வருத்தம் தான்.
Realme X Spiderman Edition Smartphone விலை
4ஜிபி/64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,499 யுவான் (ரூ. 15,000) ஆகும்.
6ஜிபி/64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,599 யுவான் (ரூ. 16,000) ஆகும்.
8ஜிபி/128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,799 யுவான் (ரூ. 18,000) ஆகும்.
மேலும் படிக்க : கூகுளுக்கு வந்த விசித்திர ஆசை... இப்படியும் ஒரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனா?