Advertisment

இந்தியாவில் என்ன விலைக்கு விற்பனையாகலாம் எக்ஸ்2 ப்ரோ? எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!

20ம் தேதி அறிமுக விழாவின் போது தான் ஸ்மார்ட்போனின் விலை என்னவென்று அறிவிக்கப்படும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Realme X2 Pro specifications, price, launch, availability

Realme X2 Pro specifications, price, launch, availability

Realme X2 Pro specifications, price, launch, availability :  இந்தியாவில் நாளை (நவம்பர் 20) வெளியாகிறது ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போனான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ. சில நாட்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட்போனின் முன் பதிவு துவங்கிய நிலையில் பலரும் ஆர்வத்துடன் வாங்க காத்திருக்கின்றார்கள். இந்த ப்ரீ-புக்கிங் கட்டணமாக ரூ. 1000த்தை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும்.

Advertisment

அதற்காக ப்ளைண்ட் ஆர்டர் என்ற பெயரில் ரியல்மி தன்னுடைய அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ஒரு பக்கத்தினை திறந்திருக்கிறது. 20ம் தேதி அறிமுக விழாவின் போது தான் ஸ்மார்ட்போனின் விலை என்னவென்று அறிவிக்கப்படும்.  நவம்பர் 20 மற்றும் 21 தேதிகளுக்கு பிறகு முன்பதிவு செய்த நபர்கள் முழுத்தொகையும் கட்ட வேண்டும். முதலில் முன்பதிவு செய்த 855 நபர்களுக்கு விரைவில் ஸ்மார்ட்போன்கள் டிஸ்பேட்ச் செய்யப்படும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ எதிர்பார்க்கப்படும் விலை

இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் வெளியானது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜும் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை 2,699 யுவானுக்கு விற்பனையானது. இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ. 27,000 ஆகும். 8ஜிபி ரேம் மாடலின் விலை 2,899 யுவான் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 29,000 ஆகும். 12 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 3299 யுவான். இந்திய விலையில் ரூ. 33 ஆயிரம். சீனாவில் என்ன விலைக்கு விற்க அறிக்கப்பட்டதோ அதே விலையையும் இங்கு எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment