/tamil-ie/media/media_files/uploads/2020/02/ERNUm81WkAIynx4-1.jpg)
Realme X50 Pro 5G sports six cameras
Realme X50 Pro 5G to sport six cameras :இந்தியாவில் வருகின்ற 24ம் தேதி வெளியாகிறது ரியல்மீ X50 ப்ரோ. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டினை தொடர்ந்து ட்விட்டரில் சிறப்பு அப்டேட்களை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இரண்டு செல்ஃபி கேமராக்கள் மற்றும் 4 பின்பக்க கேமராக்களுடன் வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மை கேமராவின் செயல்திறன் 64 எம்.பி ஆகும். இரண்டு முன்பக்க கேமராக்களும் 32 எம்.பி. செயல்திறன் கொண்டிருப்பவை. மேலும் 105-டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிள் கொண்டவை.
ரியல்மீ நிறுவனத்தின் சி.எம்.ஓ சூ க்கி தன்னுடைய வெய்போ அக்கௌண்டில் X50 ப்ரோ கேமராக்கள் குறித்த அப்டேட்டுடன் இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். பின்பக்க முதன்மை கேமரா 20 மடங்கு அதிக ஸூம் சிறப்பம்சத்தினை பெற்றுள்ளது. 119 டிகிரி அல்ட்ரா வைட் மோடினையும் இது பெற்றுள்ளது. திரையின் முன்பக்கத்தில் பஞ்ச் ஹோலில் கேமராக்கள் பொருத்தப்படும். இந்தியாவில் 24ம் தேதி மதியம் 02:30 மணிக்கு வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன். இதன் விலை ரூ. 40 ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.