/indian-express-tamil/media/media_files/2025/08/30/realme-new-concept-phone-2025-08-30-22-11-56.jpg)
5 நாட்கள் சார்ஜ் நிற்கும் போன்: 15,000mAh பேட்டரியுடன் ரியல்மி-யின் கான்செப்ட் போன்!
ரியல்மி நிறுவனம், மொபைல் போன் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 7,000mAh பேட்டரி கொண்ட P4 சீரிஸ் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிலையில், இப்போது அதைவிட 2 மடங்கு பெரிய, அதாவது 15,000mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய கான்செப்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
5 நாட்கள் பேட்டரி ஆயுள்!
சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ரியல்மி 828 ரசிகர் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த போன், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த போன் 120 மணிநேரம் (5 நாட்கள்) வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். நீங்கள் தொடர்ந்து வீடியோக்களைப் பார்ப்பவர் என்றால், 50 மணிநேரம் வரை இடைவெளி இல்லாமல் பார்க்கலாம். 2 நாட்களுக்குத் தொடர்ந்து படம், சீரியல் பார்ப்பதற்கே போதுமானது. மேலும், இதை ஒரு பவர் பேங்க் போலப் பயன்படுத்தி மற்ற சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். இந்த போனின் டிஸ்ப்ளே, ப்ராசஸர் போன்ற மற்ற தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், சமூக வலைத் தளங்களில் இந்த கான்செப்ட் போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, இந்தப் போன் 6.7 இன்ச் முழு HD டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், 4nm கிளாஸ் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ஆக்டா-கோர் ப்ராசஸர், 12GB ரேம் +256GB ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Did you watch the livestream just now? During the event, we introduced two groundbreaking concept phones that represent realme's commitment to innovation: the realme 15000mAh, which delivers up to five days of DOU on a single charge, and the realme Chill Fan Phone, which reduces… pic.twitter.com/FfeG5ubm2b
— Chase (@ChaseXu_) August 27, 2025
ரியல்மி, 'சில் ஃபேன் போன்' (Chill Fan Phone) என்ற பெயரில் உள்ளமைக்கப்பட்ட ஃபேனுடன் கூடிய மற்றொரு கான்செப்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போனின் வெப்பநிலையை 6 டிகிரி செல்சியஸ் வரை குறைத்து, கேம்கள் விளையாடும்போது சிறந்த அனுபவத்தை வழங்கும்.
இந்த புதிய கான்செப்ட் போன்களை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதா என்பதை, ரசிகர்களின் கருத்துகளைப் பொறுத்து ரியல்மி முடிவு செய்யும். சமூக ஊடகங்கள், ஓடிடி செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், இந்த 15,000mAh பேட்டரி போனுக்கு எல்லா வயதினரிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.