scorecardresearch

பட்ஜெட் பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரெட்மி 10A இவ்வளவு தான் விலை!

இந்திய சந்தையில் இரண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகியுள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள், விலை, விற்பனை தேதி போன்ற முழு விவரங்களையும் இங்கே காணலாம்

பட்ஜெட் பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரெட்மி 10A இவ்வளவு தான் விலை!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் சியோமி நிறுவனம், புதிதாக ரெட்மி 10A, ரெட்மி 10 பவர் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி 9A மாடலின் வெற்றியை தொடர்ந்து, புதிய மாடல் MediaTek Helio G25 chipset மற்றும் 13 எம் கேமராவில் வந்துள்ளது. குறிப்பாக, ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான விலையில் சிறந்த பட்ஜெட் மொபைலாக சந்தையில் அறிமுகமாகி உள்ளது.

ரெட்மி 10A சிறப்பு அம்சங்கள்

  • 6.53-இன்ச் HD+ (720×1,600 பிக்சல்கள்) IPS எல்சிடி டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ G25 பிராசஸர்
  • 3ஜிபி, 4ஜிபி ரேம்,
  • 32ஜிபி, 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 13எம்பி பின்புற கேமரா
  • 5எம்பி செல்பி கேமரா
  • 5000mah பேட்டரி

ரெட்மி 10 பவர் சிறப்பு அம்சங்கள்

  • 6.71 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி HD+ டிஸ்ப்ளே
  • கார்னிங் கோரில்லா கிளாஸ் 3
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 6000mah பேட்டரி
  • 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்(குறிப்பு: பாக்ஸில் 10W சார்ஜர் தான் வரும்)
  • 50எம்பி முன்புற கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார்
  • 5MP செல்பி கேமரா

விலை விவரம்

ரெட்மி 10A

  • 3ஜிபி,32ஜிபி ஸ்டோரேஜ் – ரூ8,499
  • 4ஜிபி, 64ஜிபி ஸ்டோரேஜ் – ரூ9,499

சார்கோல் பிளாக், சீ புளூ மர்றும் ஸ்லேட் கிரே என மூன்று நிறங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், அமேசான் இந்தியா, Mi.com, Mi ஹோம் ஸ்டோர், Xiaomi retail partners ஆகியவற்றில் ஏப்ரல் 26 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பவர் பிளாக் மற்றும் ஸ்போர்ட் ஆரஞ்சு நிறங்களில் வெளியாகும் ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் மாடலின் விலை விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செல்போனின் விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Redmi 10a redmi 10 power launched in india check price features