/indian-express-tamil/media/media_files/Ql19upDK56dTvzqEhhAy.jpg)
இந்தியாவில் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிரீமியம் டிசைன் கொண்ட 5ஜி போனாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது லாவா ப்ளேஸ் ப்ரோ 5ஜி, சாம்சங் கேலக்சி M14 போன்ற பிற ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த பட்ஜெட் போனாக ரெட்மி 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை விவரம்
4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 13சி பேஸ் வெரியண்ட் போன் ரூ.10,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.12,499, அதேசமயம் 8ஜிபி + 256ஜிபி வெரியண்ட் போன் விலை ரூ.14,499 ஆக உள்ளது. இது ஸ்டார்ட்ரெயில் சில்வர், ஸ்டார்ட்ரெயில் கிரீன் மற்றும் ஸ்டார்லைட் பிளாக் உள்ளிட்ட 3 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்
ரெட்மி 13சி 90Hz புதுப்பிப்பு வீதம், 180Hz டச் சேம்பிளின் ரேட், மற்றும் 600nits பீக் பிரைட்னஸ் 6.74-இன்ச் எல்.சி.டி டிஸ்ப்ளே ஆகியவை கொண்டுள்ளது. குழு HD= தெளிவுத்திறனில் இயங்குகிறது. கொரில்லா கிளாஸ் 3 கோட்டிங் மற்றும் இந்த போன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ்-எதிர்ப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் ஃபோன் 6nm MediaTek Dimensity 6100+ ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது Realme 11x மற்றும் Realme 11 5G ஐ இயக்கும் அதே சிப்செட் ஆகும்.
டூயல் ரியர் கேமரா செட்அப் கொண்ட இந்த போன் 50 மெகா பிக்சல் ப்ரைமரி கேமரா கொண்டு உள்ளது. Redmi 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போட்டுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. ஆனால் நிறுவனம் ஃபோனுடன் 10W சார்ஜரை மட்டுமே வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.