Redmi 9 Tamil News: இந்தியாவில் ரெட்மீ நோட் 9 அறிமுகம் ஆகியுள்ள நிலையில், சியோமி நிறுவனம், ஆகஸ்ட் 4ம் தேதி, புதிய ஸ்மார்ட்போன் ரெட்மீ 9 யை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 48 மணிநேரம் தொடர்ந்து நடைபெற உள்ள அமேசான் பிரைம் டே ஷாப்பிங் திருவிழாவிலும் கிடைக்கும் என்பது இதன் தனிச்சிறப்பு.
சர்வதேச அளவில் ரெட்மீ 9 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, இந்தியாவில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு ரெட்மீ 8 அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு ரெட்மீ 9 அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சியோமி நிறுவனம், மற்ற போன்களின் அறிமுகங்களை போன்றே இந்த போனின் அறிமுக விழாவையும் மிகச்சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி அறிமுக விழா நடைபெற உள்ளது. இந்த விழா, சியோமி யூடியூப் சேனல் மற்றும் அதன் சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை அதற்கான லிங்க் வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும், ரெட்மீ 9 போன் குறித்த தகவல்களை அடங்கிய பிரத்யேக பக்கம் Mi.com மற்றும் Amazon.in இணையதளங்களில் இடம்பெற்றுள்ளன.
அமேசான் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில், விரைவில் வரவுள்ள ரெட்மீ 9 போனும், ரெட்மீயின் மற்ற போன்களைப்போல பச்சை நிறத்திலேயே உள்ளது.மற்ற வண்ணங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளில் கார்பன் கிரே, சன்செட் பர்பிள் மற்றும் ஒசன் கிரீன் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த டீசரில், ரெட்மீ 9 போன், வாட்டர்டிராப் நாட்ச் உடனும். முன்புறத்தில் சிறிய அளவிலான பெசல்களும் உள்ளன. 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக், ஸ்பீக்கர் கிரில்கள், சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை போனின் கீழ்புறத்தில் உள்ளன. போனின் பின்பகுதி காட்டப்படாத நிலையில், அது குளோபல் வெர்சனை ஒத்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் வெர்சனான ரெட்மீ 9 போனில் 4 முன்பக்க கேமராக்களும், பின்பகுதியில் பிங்கர்பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
ரெட்மீ 9 குளோபல் வெர்சன், 6.53 இஞ்ச் புல் ஹெச்டி மற்றும் டாட் டிராப் டிஸ்பிளேவும், 2340* 1080 ஸ்கிரின் ரெசொல்யுசனும் கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி80 புராசசர் உடன் 4 ஜிபி வரையிலான ராம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்தியாவில், சியோமி பல புதிய வேரியண்ட்களை அறிமுகம் செய்ய உள்ளது.
போனின் முன்பக்கத்தில், 13MP+8MP+5MP+2MP கேமராக்களும், 8 எம்பி செல்பி ஷீட்டரும் உள்ளது. 5020 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி திறனும், 10 வாட்ஸ் சார்ஜரும் பாக்சில் உள்ளது. டைப் சி போர்ட், கொரில்லா கிளாஸ், பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ்ஐடி, 2+1 ஸ்லாட் டிசைன் உள்ளது.
Redmi 9 Price: இந்தியாவில் ரெட்மீ 9 போனின் விலை
ரெட்மீ 9 போன் சர்வதேச அளவில் 3GB RAM + 32GB storage இந்தியமதிப்பில் ரூ.12,800 என்ற அளவிலும், 4GB RAM and 64GB internal storage இந்தியமதிப்பில் ரூ.15,400 என்ற அளவிலும் சர்வதேச நாடுகளில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் இந்தளவிற்கு விலை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நியூமரிக் சீரிஸ் போன்களே ரூ.8 ஆயிரத்திற்குள் உள்ளதால், ரெட்மீ 9 போனும் இந்தளவிலேயே விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருந்தபோதிலும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் இருப்பதால், விலை சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.