Shruti Dhapola
Redmi K20 Pro Review: Redmi K20 Pro Specifications, Features, Price : சியோமி நிறுவனம் தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எப்போதும் ரூ.15,000க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வைக்கும் இந்த நிறுவனம் முதன்முதலாக ஹையர் எண்ட் வெர்ஷனில் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மீ கே20 மற்றும் கே20 ப்ரோ என ஒரு சீரியஸின் இரண்டு போன்களாக வெளிவந்திருக்கும் இந்த போன்கள் ரெட்மீ நிறுவனத்தின் 20 ஆயிரம் ரூபாய் விலையை கடந்த முதல் இரண்டு போன்களாகும்.
மேலும் படிக்க : 3 பின்பக்க கேமராக்களை கொண்ட எல்.ஜி.யின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன?
Xiaomi Redmi K20 Pro சிறப்பம்சங்கள்
ஔரா ப்ரைம் டிசைனில் வெளியாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் ஸ்டைலான மூன்று நிறங்களில் வெளியாகி உள்ளது. கார்பன் ப்ளாக், ரெட் மற்றும் ப்ளூ. இதில் கார்பன் ப்ளாக் நிற ஸ்மார்ட்போன் மிகவும் அழகாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் அறிவிக்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/redmik20pro_review7.jpg)
06.39 இன்ச் அளவுள்ள் ஏ.எம்.ஓ.எல்.இ.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரெசலியூசன் 1080 x 2230 பிக்சல்களாகும். திரைக்கு அடியில் இருக்கும் இன் - டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். நல்ல வெளிச்சத்திலும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த இயலும். Widevine L1 certification -னுடன் இந்த ஸ்மார்ட்போன் வந்திருப்பதால் உங்களால் நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப் போன்ற வீடியோ லைவ் ஸ்ட்ரீமிங்கை துல்லியமாக கண்டு ரசிக்க இயலும்.
எச்.டி.ஆர் கண்டெண்ட்களை கொண்டுள்ளதால் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகளையும் மிகவும் துல்லியமாக கண்டு ரசிக்க இயலும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/redmik20pro_antutu.jpg)
ஸ்டோரேஜ் திறன்
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜூடன் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். Antutu BenchMark தேர்வில் 324,888 புள்ளிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. GeekBench 4 தேர்வில் 3458 புள்ளிகளை பெற்றுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/redmik20pro_geekbench4.jpg)
சமூக வலைதளங்களில் இதனை பயன்படுத்தும் போது எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் மிகவும் இயல்பாக பயன்படுத்த முடிந்தது. ஆப் க்ராஷஸ் கிடையாது. அதே போன்று வேறொரு ஆப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்தால், மற்ற ஆப்கள் க்ளோஸ் ஆகுதல் போன்ற செயல்கள் எதையும் இதில் பார்க்க இயலவில்லை.
பேட்டரி
4000 mAh செயல்திறன் கொண்ட பேட்டரி இதில் இயங்கி வருகிறது. இதனை 27வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் ரூ.999 கொடுத்து தணியாக வாங்கிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் இதனை நீங்கள் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதனை நீங்கள் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள இயலும். நீங்கள் எந்த அப்ளிகேசன்களையும் முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்திலும் அந்த நாளின் இறுதியில் 20% ஆக பேட்டரி குறைந்து தான் போகும்.
கேமரா
இந்த ஸ்மார்ட்போன் 3 பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. 48 எம்.பி+8 எம்.பி+13 எம்.பி செயல்திறன்களை கொண்டதாகும். 8 எம்.பி. லென்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் ஆகும். 13 எம்.பி. லென்ஸ் அல்ட்ரா வைட் லென்ஸ் ஆகும். இதன் மூலம் நல்ல தரமான புகைப்படங்களை எடுக்க இயலும். 2 மடங்கு ஸூம் செய்யப்பட்டு டெலிபோட்டோவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/redmik20pro_sample6.jpg)
இந்த போன் வாங்கலாமா வேணாமா?
நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மிகவும் சரியான தேர்வாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். திரை, செயல்பாடு, வடிவமைப்பு மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. புஷ் நோட்டிஃபிகேசன்ஸ் மட்டுமே இதில் இருக்கும் மிக முக்கியமான எரிச்சலூட்டும் அம்சமாகும். குறைந்த ஒளியில் செயல்படுதல் மற்றும் பேட்டரி செயல்பாடு மட்டும் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம்.
விலை
8ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30,999 ஆகும். 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27,999 ஆகும்.