பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 11 சீரிஸ்… ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ, டிவி விலை இவ்வளவு தானா! குஷியில் ரசிகர்கள்
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11, 11s ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. அத்துடன் கூடுதலாக ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ, ரெட்மி 43 இன்ச் டிவியும் விற்பனைக்கு வருகிறது. அவற்றின் விலை, சிறப்பு அம்சங்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
Advertisment
இந்நிலையில், சியோமி நிறுவனம் தனது அடுத்த படைப்புகளான ரெட்மி நோட் 11 சீரிஸ், ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ, ரெட்மி டிவி ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 11 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான், சியோமி எம்ஐ தளம், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் ஆப்லைன் கடைகளில் கிடைக்கவுள்ளது.
ரெட்மியின் புதிய சாதனங்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை கீழே காணுங்கள்
ரெட்மி நோட் 11 சிறப்பு அம்சங்கள்
6.43 இன்ச் ஹெச்டி AMOLED டிஸ்பிளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
கார்னிங் கோரில்லா கிளாஸ் 3
ஆண்ட்ராய்டு 11
4ஜிபி, 6ஜிபி ரேம்
64ஜிபி,128ஜிபி ஸ்டோரேஜ்
50எம்.பி முதன்மை கேமரா, 8எம்பி அல்டரா வைட் கேமரா, 2எம்.பி மேக்ரா கேமரா, 2எம்.பி portrait கேமரா என மொத்தம் நான்கு பின்புற கேமரா உள்ளன.
13 எம்.பி செல்பி கேமரா
5000mah பேட்டரி
33W பாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை
4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் - ரூ13,499
6ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.14,499
6ஜிபி ரேம்,128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ15,999
இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
ரெட்மி நோட் 11S சிறப்பு அம்சங்கள்
6.43 இன்ச் ஹெச்டி AMOLED டிஸ்பிளே
Mediatek Helio G96 ப்ராசஸர்
கார்னிங் கோரில்லா கிளாஸ் 3
ஆண்ட்ராய்டு 11
6ஜிபி, 6ஜிபி ரேம்
64ஜிபி,128ஜிபி ஸ்டோரேஜ்
108 எம்.பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்டரா வைட் கேமரா, 2 எம்.பி மேக்ரா கேமரா, 2 எம்.பி portrait கேமரா என மொத்தம் நான்கு பின்புற கேமரா உள்ளன.
5000mah பேட்டரி
33W பாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை
6ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.15,499
6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.17 499
8ஜிபி ரேம்,128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ18,499
ரெட்மி ஸ்மார்ட்பேண்ட் ப்ரோ சிறப்பு அம்சங்கள்
1.47-இன்ச் AMOLED ஃபுல் டச் கலர் டிஸ்ப்ளே
Ambiq Apollo 3.5 ஓஎஸ்
வாட்டர் ரெசிஸ்டன்ட்
200mah பேட்டரி
14 நாள்கள் வரை சார்ஜ் இருப்பு
110 பிட்நஸ் மோட்
ஸ்லீப் மானிட்டரிங், சுவாசப் பயிற்சி, மன அழுத்தம் கண்காணிப்பு மற்றும் பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்திற்கான கண்காணிப்பு.
புளூடூத் 5.0
Xiaomi Wear செயலியுடன் இணக்கலாம்.
விலை
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ ரூ. 3,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக 3,499க்கு கிடைக்கிறது. இந்த சாதனம் பிப்ரவரி 14 மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
ரெட்மி ஸ்மார்ட் டிவிஎக்ஸ் 43 சிறப்பு அம்சங்கள்
43 இன்ச் டிஸ்ப்ளே
டால்பி விஷன் ஆதரவுடன் 4K HDR
30W ஸ்பீக்கர்கள்
சியோமியின் சொந்த பேட்ச்வால் ஓஎஸ்.
விலை
ரெட்மி ஸ்மார்ட் டிவிஎக்ஸ் 43 இன் விலை 28 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இதனை அமேசான், எம்ஐ தளம், ஆன்லைன் கடைகளில் வாங்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil