இந்தியாவில், ரெட்மி நோட் 12 சீரிஸ் வரும் (2023) ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும், மேலும் ரெட்மி நோட் 12 5ஜி இந்த வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதை சியோமி உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுவாக, Redmi Note தொடர் பல வகைகளைக் கொண்டுள்ளது. ப்ரோ நோட் மற்றும் ப்ரோ பிளஸ் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த ஆண்டு, Redmi Note 11 Pro+ மற்றும் Redmi Note 11T ஆகியவை மட்டுமே 5ஜி ஸ்மார்ட்போன்களாக இருந்தன. ஆனால் 2023 இல் பல புதிய மாடல்கள் அறிமுகமாக உள்ளன.
இந்த நிலையில், ஜனவரி 5 ஆம் தேதி மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதை ஜியோமி நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.
Redmi Note 12 Pro+ ஆனது Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 உடன் 200 MP கேமராவுடன் இருக்கும். இவை மூன்றும் 5G ஸ்மார்ட்போன்களாக இருக்கும்.
முன்னதாக Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro+ ஆகியவை இந்த ஆண்டு அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ப்ரோ+ வேரியண்டில் 200எம்பி கேமராவுடன் 5ஜி ஆதரவு மிகப்பெரிய மாற்றமாக இருந்தது. சீனாவில், Redmi Note 12 ஆனது Snapdragon 4 Gen 1 சிப் மூலம் இயக்கப்படுகிறது,
மேலும் Note 12 Pro மற்றும் Pro+ ஆகியவை MediaTek Dimensity 1080 சிப் மூலம் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், 6.67-inch FHD+ OLED டிஸ்ப்ளேவுடன் காணப்பட்டது. இதுதவிர 5000 mAh பேட்டரி, 33W வேகமாக சார்ஜிங் மற்றும் 48MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ. 14,000 இல் இருந்து தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/