இந்தியாவில் ரெட்மி நோட் 13 சீரிஸ் ( Redmi Note 13 Series) ஸ்மார்ட் போன்கள் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை 4 ஜியோமி அதிகாரப் பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ரெட் மி நோட் 13 சீரிஸில் மொத்தம் 3 மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. என்டரி லெவல் போனாக நோட் 13, மிட்-டையர் நோட் 13 ப்ரோ மற்றும் ஹை- எண்ட் மாடலாக நோட் 13 ப்ரோ பிளஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. ஹை- எண்ட் மாடலில் curved AMOLED ஸ்கீரின், IP68 ரேட்டிங் மற்றும் 200 MP கேமரா ஆகியவை கொண்டுள்ளது.
ரெட்மி ஏற்கனவே அமேசானில் நோட் 13-க்கான மைக்ரோசைட்டைக் கொண்டிருந்தாலும், ப்ளிப்கார்ட் தளத்திலும் சில வகைகள் கிடைக்கும்.
ரெட்மி நோட் 13
ரெட் மி நோட் 13 ஆனது MediaTek Dimensity 6080 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது கடந்த ஆண்டு பிரபலமான Snapdragon 695 ஐப் போலவே செயல்படுகிறது. ரெட் மி நோட் 13 Glass 5 ஆல் பாதுகாக்கப்பட்ட 6.67-inch 120Hz AMOLED திரையைக் கொண்டிருக்கும். Lava Storm 5G-ல் வரும் அதே சிப்செட்டை இந்த போனும் கொண்டுள்ளது.
இது 108 எம்.பி ப்ரைமரி கேமராவுடன் 8 எம்.பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2 எம்.பி டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போன் ஆண்ட்ராய்டு 13 இன் அடிப்படையில் MIUI 14 உடன் வரும் என்று கூறப்படுகிறது, மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவலின்படி, ரெட்மி நோட் 13 6ஜி.பி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன் ரூ.20,999க்கு விற்பனை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ
ரெட்மி நோட் 13 ப்ரோ வளைந்த 120Hz 6.67-இன்ச் AMOLED ஸ்கிரீனைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் நிறுவனம் ப்ரோ வகைகளில் Full HD+ முதல் 1.5K வரை ரெசல்யூசல் வழங்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட்டை கொண்டிருக்கும் முதல் போன், ரெட்மி நோட் 13 ப்ரோ என ஜியோமி உறுதிப்படுத்தியுள்ளது. 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் மூலம் 200MP முதன்மை கேமராவை போன் கொண்டிருக்கும்.
ரெட்மி நோட் 13 ப்ரோ 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,100mAh பேட்டரியை கொண்டிருக்கும். water resistance ரேட்டிங் IP54 வழங்குகிறது. தொடர்ந்து 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் போன் விலை ரூ.28,999 முதல் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ்
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஹை- எண்ட் மாடல் போனாகும். நோட் 13 ப்ரோவின் அதே வளைந்த 6.67-இன்ச் 120 ஹெர்ட்ஸ் AMOLED திரையை இந்த ஃபோன் கொண்டிருக்கும் மற்றும் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படும்.
ரெட்மி நோட் சீரிஸில் முதல் முறையாக நோட் 13 ப்ரோ பிளஸ் ஆனது IP68 ரேட்டிங் மற்றும் water and dust resistance வழங்கும் என கூறப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் MIUI 14 இல் இயங்கும் மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
கேமரா அமைப்பை பொறுத்தவரை 8MP அல்ட்ரா வைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் 200MP ப்ரைமரி சென்சார் கொண்டுள்ளது.
12 ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜை வழங்கும், இதன் அடிப்படை வெரியண்ட் மாடல் விலை ரூ. 33,999 என்று கூறப்படுகிறது. இது ரெட்மி நோட் சீரிஸின் முதல் விலை உயர்ந்த போனாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.