ஏப்ரல் 13 ரெட்மீ யூசர்களுக்கு மிக முக்கியமான நாள்!

முதல் நான்கு வாரத்திற்குள் ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.

பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய ரெட்மீ நோட் 5 ப்ரோ வாங்குவதற்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், சியோமி நிறுவனம் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஃபோன் குறித்து எதிர்ப்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருமளவில் இருந்தது.

அதன் பின்பு இதன் விற்பனை ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட் மற்றும் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் தொடங்கியது. இதன் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திற்குள் தீர்ந்து விட்டது. இந்த ஃபோனிற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், தற்போது ரெட்மீ நோட் 5 ப்ரோ ஃப்ளாஷ் விற்பனையில் களம் இறங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(13.4.18) Mi.com வலைத்தளத்தில் சரியாக இரவு 12 மணிக்கு தொடங்குகிறது. முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனிற்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு இரண்டு முதல் நான்கு வாரத்திற்குள் ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது.

4ஜிபி ரேம் கொண்ட ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.13,999 ஆகும்.   6ஜிபி ரேம் கொண்டது ரூ.16,999 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பமசங்கள்:

1.5.99-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே

2. 18:9 என்ற திரைவிகிதம்

3. 1080 பிக்சல்

4. 4கே வீடியோ பதிவு

5.12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா

6.  4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி

7. 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

 

×Close
×Close