Xiaomi Redmi Note 8 Pro camera specifications, price, Indian launch, availability : உலகின் முதல் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனான ரெட்மீ நோட் 8 ப்ரோ சமீபத்தில் சீனாவில் வெளியானது. ஏற்னவே ஒரு போனின் பின்பக்கத்தை திருப்பிப் பார்த்தால் பாதி இடத்தை நிரப்பி வைத்திருக்கிறது போனும், ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும். இந்நிலையில் புதிய அப்டேட்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் நான்கு கேமரா ஐந்து கேமரா என்ற ரீதியில் செட்-அப்பை மாற்றிக் கொள்ள, சில நிறுவனங்கள் கேமரா செயல்திறனை மாற்றி வருகின்றன. ஏற்கனவே 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் வெளியான நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Xiaomi Redmi Note 8 Pro camera specifications, price, Indian launch, availability – கேமரா செட்-அப்
முழுக்க முழுக்க பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா வைட் கேமரா, மேக்ரோ சென்சார் மற்றும் டெப்த் சென்சார் அடங்கிய க்வாட் கேமரா செட்-அப்பை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 64 எம்.பி + 8 எம்.பி (அல்ட்ரா வைட்) + 2 எம்.பி(டெப்த் செனார்) + 2 எம்.பி (மேக்ரோ சென்சார்) என இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்குள் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் இவ்வளவு துல்லியமான புகைப்படங்கள் எடுக்க இயலுமா என்ற ஆச்சரியத்தை தான் இந்த புகைப்படங்கள் நமக்கு அளிக்கின்றன. இந்த புகைப்படத்தின் ரெசலியூசனும் மிக அதிகமானவை. நம்மால் எதிர்பார்க்கவே இயலாதவை என்றும் கூட கூறலாம். ஃபோட்டோ ஷூட் மோடில் நமக்கு 9248×6936 – இந்த ரெசலியூசனில் பிக்சர்கள் கிடைக்கின்றன.

கலர் ரீ-ப்ரொடெக்சன் செல்ஃபி மற்றும் பின்பக்க கேமரா புகைப்படங்களிலும் மிக அருமையாகவே வெளிப்படுகிறது. நைட் மோடில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட அவ்வளவு துல்லியமாய் நமக்கு புகைப்படங்களை தருகின்றது.


மேலும் படிக்க : 15 லட்சம் முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்த சியோமி… கிலியில் போட்டி நிறுவனங்கள்…
இத்தனை சிறப்பான கேமராவை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து அனைவருக்கும் ஒரு வித கவலை ஏற்படுவதில் வியப்பில்லை. ஆனால் சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 1399 யுவான் ஆகும். அதாவது இந்திய விலையில் ரூபாய் 13,999. இன்னும் சில வாரங்களில் இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் விலைக்கு வந்துவிடும்.